Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காத்திருப்போர் பட்டியலில் ராமதாஸ்..வெயிட் செய்ய வைத்த திமுக! கழற்றிவிட்ட அதிமுக! கடைசி வாய்ப்பென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசியலில் தற்போது மிகப் பெரிய கேள்வியாக மாறியிருப்பது, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்ராமதாஸ் எந்த கூட்டணியைத் தேர்வு செய்யப் போகிறார் என்பதுதான். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்ட நிலையில்,ராமதாஸுக்கான கூட்டணி வாய்ப்புகள் மங்கிவிட்டதாகவே சொல்லப்படுகிறது.

கடந்த காலத்தில் பாமகவுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தேர்தல் நேரத்தில் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியது, அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியது போன்ற சம்பவங்கள், இந்த முரண்பாடு தற்காலிகமல்ல என்பதை வெளிப்படுத்தின.

இதனால் இருவரும் ஒன்றாக செயல்படுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. இந்தச் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியில் அன்புமணி திடீரென இணைந்தது, பாமக என்ற பெயரைவிட அன்புமணி தலைமையிலான பாமக என்பதையே பாஜக அங்கீகரித்துள்ளது என்பதையும் காட்டுகிறது.

Ramadoss PMK AIADMK

ராமதாஸ் கூட்டணி குழப்பம்

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் இதற்குப் பின்னணியாக உள்ளன. வட தமிழகத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம், வன்னியர் சமூகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் செல்வாக்கை தெளிவாக வெளிப்படுத்தியது. இதன் அடிப்படையில்தான், அன்புமணியை அரவணைத்தால் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணக்கை அதிமுக போட்டுள்ளது. அன்புமணி தரப்பினர் பேசுகையில்," ராமதாஸ் கூட்டணியில் இடம் பெறக் கூடாது என்பதே அதிமுகவில் இணைவதற்கான முக்கிய நிபந்தனையாக இருந்ததாம். இதனால், ராமதாஸின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வி மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது.

பாமக அரசியல் பிளவு

ராமதாஸை பொருத்தவரை, இந்தத் தேர்தல் வெறும் கூட்டணி விவகாரம் மட்டுமல்ல. இது பாமக யார் கட்டுப்பாட்டில் இருக்கப்போகிறது என்பதற்கான இறுதிப் போட்டி என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அன்புமணியைவிட அதிக எம்எல்ஏக்களைப் பெற்றுவிட்டால், தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கட்டுப்பாடு தங்களிடம் வரும் என்ற கணக்கை ராமதாஸ் தரப்பு போடுகிறது. அதேபோல், அன்புமணியும் அதிக எம்எல்ஏக்களைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார். இதனால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் முந்தும் முயற்சியில் உள்ளனர்.

திமுக பாமக பேச்சுவார்த்தை

இப்போதைய நிலவரப்படி ராமதாஸுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. திமுக கூட்டணியில் இணைந்து, விசிகவுக்கு வழங்கப்படும் அளவிலான தொகுதிகளைப் பெற்று, அன்புமணி போட்டியிடும் இடங்களில் நேரடியாக எதிர்கொள்வது ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைந்து, அதிக தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதும் இன்னொரு சாத்தியமாக பேசப்படுகிறது. வன்னியர் இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி தனித்து போட்டியிடும் யோசனையும் ராமதாஸ் தரப்பில் உள்ளது.

அன்புமணி

கடைசியாக, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டு, அதிமுக கூட்டணியில் சில தொகுதிகளைப் பெறும் வாய்ப்பும் முற்றிலும் நிராகரிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது. அன்புமணி அதிமுக கூட்டணியில் இருப்பதால், பென்னாகரம், தருமபுரி, மேட்டூர், சேலம் மேற்கு போன்ற வன்னியர் ஆதிக்கம் கொண்ட தொகுதிகளில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கணிக்கப்படுகிறது. இந்தத் தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது கடினம் என்பதால், ராமதாஸ் தரப்பை கூட்டணியில் சேர்த்து, அன்புமணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த திமுக முயற்சி செய்யக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.

வன்னியர் அரசியல்

ஆனால் இதனால் பிற சமூக வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால், திமுக தலைமையில் தயக்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜயை பொருத்தவரை, இதுவரை பெரிய கட்சிகள் கூட்டணிக்கு வராத நிலையில், ராமதாஸை சேர்த்துக்கொள்வது ஒரு அரசியல் பலமாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் சமூக வாக்குகள் விலகிச் செல்லும் அபாயம் இருப்பதால், அவரும் எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

கூட்டணி வாய்ப்பு

மொத்தத்தில், திமுக, அதிமுக கூட்டணிகள் எந்த வடிவத்தை எடுக்கும் என்பது தெளிவாகும் வரை ராமதாஸ் "காத்திருப்போர் பட்டியலில்" இருப்பார் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அல்லது தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னர், ராமதாஸின் கூட்டணி முடிவு வெளிப்படுத்த்ப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+