Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியல் ஆதரவற்ற நிலையில் அய்யா.. ராமதாஸுடன் பேசவேயில்லை! எண்ட் கார்டு போட்ட தமிழக வெற்றிக் கழகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அதிமுகவால் புறக்கணிக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் எந்த அரசியல் கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஒரு ஆக்சன் படத்தின் கிளைமாக்ஸ் போல அடுத்து என்ன நடக்கும் என்பது தான் தற்போது தமிழக அரசியலில் கள நிலவரம் ஆக இருக்கிறது.

பல்வேறு இடைஞ்சல்களுக்கு இடையே அதிமுக பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஓரளவு முழுமை பெற்றிருக்கிறது. இரு துருவங்களாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி- டிடிவி தினகரன் சேர்ந்திருக்கின்றனர்.

Ramadoss PMK TVK

2026 சட்டமன்றத் தேர்தல்

மேலும் பாமக, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் சேர்ந்து இருக்கிறது. மறுபுறம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையாக இருந்த திமுக கூட்டணியில் அதிருப்தி குரல்கள் எலத் தொடங்கி இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என பேச ஆரம்பித்த காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்ட ஆரம்பித்தது திமுக. இடையில் முதல்வர் ஸ்டாலின் ராகுல் பேச்சுவார்த்தையால் கூட்டணி உறுதி செய்யப்படுவது போல இருந்தது. இதற்கிடையே அன்புமணி ராமதாஸ் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்த ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

திமுக கூட்டணி

வட மாவட்டங்களில் வன்னியர் வாக்குகள் கிடைக்கும் என்பதால் திமுகவும் அதற்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் தான் நன்றாக சென்று கொண்டிருந்த திமுக கூட்டணியில் ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரத்தை சுட்டிக்காட்டி 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவான பாமக கூட்டணிக்கு வந்தால் விசிக இருக்காது என வெளிப்படையாக பேசி இருக்கிறார் திருமாவளவன். இத்தனை ஆண்டுகள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை விட்டுக் கொடுக்க திமுக தயாராக இல்லை. இதனால் ராமதாசை திமுக கைகழுவி விட்டது.

ராமதாஸ் பாமக

இத்தனை நாட்களாக திமுக நமக்கு மிக அதிக அளவிலான தொகுதிகளை தரும் என கூறி வந்த ஜிகே மணியும் சத்தம் இல்லாமல் அடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த ராமதாஸ் திமுகவை தனது அறிக்கைகள் வாயிலாக விமர்சித்து வருகிறார். கடந்த மாதம் வரை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவருக்காக திமுக அரசை பாராட்டி வந்த ராமதாஸ் தற்போது கூட்டணியில் சீட்டு கொடுக்காததால் அதனை விமர்சித்து வருகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

விஜயுடன் பேச்சுவார்த்தை

இது ஒருபுறம் இருக்க தமிழக வெற்றிக்கழகத்துடன் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் ராமதாசை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை என்ற பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் தவெக ராமதாஸ் பேச்சு வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது தமிழக வெற்றி கழகம். எந்த கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை என அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு துணை செயலாளரான ராஜ்மோகன்.

தவெ கழகம் மறுப்பு

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழக வெற்றிக் கழகத்தை பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு படுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என கூறியுள்ளார்.இதனால் இந்த தேர்தலில் தனித்து விடப்பட்டுள்ளார் ராமதாஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+