"எனக்கு ஓய்வே கிடையாது!" அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ்! காரின் முன் சீட்டில் கம்பீரத்துடன் ராமதாஸ்
சென்னை: எனக்கு ஓய்வே கிடையாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த அவர் டிஸ்சார்ஜ் ஆன போது செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்களா ஐயா என செய்தியாளர்கள் கேட்டதற்கு எனக்கு ஓய்வே கிடையாது என பதிலளித்துவிட்டுச் சென்றார்.
86 வயதான ராமதாஸ், கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி உடல்நிலை பாதிப்பால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் அடங்கிய குழுவால் முழுமையான இதயப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்றைய தினம் ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளியான நிலையில் ராமதாஸுக்கு ரத்த குழாயில் அடைப்புகள் ஏதும் இல்லை. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரு நாட்களாக மருத்துவமனையில் இருந்த ராமதாஸை, முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோர் சந்தித்து, அவரின் உடல்நிலையை அறிந்து, விரைவான குணமடைய வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ராமதாஸ், கடந்த டிசம்பர் மாதத்தில் தனது மகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். கடந்த சில மாதங்களாக தந்தைக்கும் மகனுக்கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அன்புமணியை பாமகவிலிருந்தே நீக்கினார்.
ஆனால் அன்புமணியோ தான் பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டதால் தன்னை நீக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு இல்லை என கூறி வந்தார். இவர்களின் பஞ்சாயத்து தேர்தல் ஆணையம் வரை சென்றுள்ளது.
இந்நிலையில், அன்புமணி, தந்தையின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை நேரில் சந்தித்து, மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆனால் ராமதாஸ் ஐசியூவில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்த நிலையில் அடுத்த நிமிடமே ராமதாஸ் வார்டில் சிரித்து பேசும் வீடியோவை ஜி.கே. மணி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மருத்துவ பரிசோதனைகள் முடிந்ததும், ராமதாஸ் தன்னுடைய இல்லத்திற்கு திரும்பி, கட்சி நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
லாஸ்ட்டில் ராமதாஸ் "இவருடன்" கூட்டணியா? வடக்கையும் தெற்கையும் அதிரவைக்கும் அரசியல்வாதி யார்? -
கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க












Click it and Unblock the Notifications