வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை.. ராமதாஸ் மீது ஸ்டாலின் கடும் தாக்கு
அதிமுகவை மிக மோசமாக வார்த்தைக்கு வார்த்தை விமர்சித்துவிட்டு தற்போது அதே கட்சியுடன் பாமக கூட்டணி வைத்து இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: அதிமுகவை மிக மோசமாக வார்த்தைக்கு வார்த்தை விமர்சித்துவிட்டு தற்போது அதே கட்சியுடன் பாமக கூட்டணி வைத்து இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்து இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. இன்றுதான் இதற்கான கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது. அதிமுக கூட்டணியில் மொத்தம் 7 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.
இந்த நிலையில் இந்த கூட்டணியை திமுக தலைவர் ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். வேலூரில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

வேறு சில விஷயம்
ஸ்டாலின் தனது பேச்சில், அதிமுகவை விமர்சித்துவிட்டு அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளது பாமக. பாமக நிறுவனர் ராமதாசுக்கு வெட்கம், சுரணை எதுவும் கிடையாது. மக்களை பற்றி கொஞ்சமும் கவலைபடாத கட்சிதான் பாமக. 7 தொகுதிகளும், 1 ராஜ்ய சபா சீட் மட்டும் இந்த கூட்டணிக்கு பின் இல்லை, இந்த கூட்டணிக்கு பின் வேறு சில விஷயங்களும் இருக்கிறது.

பாமக பேசியது
அதிமுக ஆட்சியை விமர்சித்து பாமக தொடர்ந்து பேசியது. வெறும் அறிக்கையோ, பேட்டியோ கொடுக்கவில்லை, இதற்காக பெரிய புத்தகமே போட்டது. அதிமுகவிற்கு எதிராக அதிமுகவின் கதை என்று புத்தகம் போட்டவர் டாக்டர் ராமதாஸ். ஆளுநரிடம் சென்று அதிமுக பற்றி பாமக ஊழல் புகார் கொடுத்தது.

கடும் எதிர்ப்பு
அதிமுகவிற்கு எதிராக தொடர்ந்து பேசிவிட்டு இப்போது அவர்களுடன் சென்று கூட்டணி வைத்து இருக்கிறார்கள். எப்படி எல்லாம் பேசினார்கள், இப்போது எந்த கவலையும் இன்றி கூட்டணி வைக்க சென்று இருக்கிறார்கள். ஜெயலலிதா, எடப்பாடி, ஓ. பன்னீர்செல்வம் என்று எல்லோரையும் விமர்சித்தவர்தான் ராமதாஸ்.

தோல்வி அடைந்த கூட்டணி
அதிமுக பாமக கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி. 2009 தேர்தலில் அதிமுக -பாமக கூட்டணி மிக மோசமாக தோல்வி அடைந்தது. 2009 தேர்தல் நிலைதான் 2019 தேர்தலிலும் பாமகவுக்கு ஏற்படும். இந்த கூட்டணி தேர்தலில் மிக மோசமாக தோல்வியை சந்திக்கும்.

பணம் மட்டுமே
பணத்தைப் பற்றி மட்டுமே டாக்டர் ராமதாஸுக்கு கவலை. பாமக சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறி மாறி செல்வது வழக்கம்தான். நாங்கள் சூழ்நிலைக்காக கூட்டணி வைக்கவில்லை. நாங்கள் மக்களுக்காக கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கடும் வார்த்தையில் விமர்சனம்
மு.க.ஸ்டாலின் பேசும்போது டாக்டர் ராமதாஸை மிகக் கடுமையாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் குறித்து அவர் கூறுகையில், அதிமுகவின் கதை என்ற பெயரில் புத்தகம் எழுதி அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்த பெரியவர் இன்று அவர்களிடம் போய் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டு கூட்டணி வைத்துள்ளார். வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை என்று ஸ்டாலின் கடுமையாக பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications