பொங்கல் பரிசு ரூ 3000! இன்னும் 50 நாள் இருக்கு! அஞ்சி நடுங்கும் திமுக! அன்புமணி அட்டாக்
சென்னை: பொங்கல் பரிசுத் தொகை ரூ.3000 தருவதாக அறிவித்துள்ளது, தோல்வி பயத்தில் திமுக நடுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே.
கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை திரும்பிக் கூட பார்க்காத திமுக அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவார்கள். இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.பொங்கல் ரொக்க பரிசாக ரூ 3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதில் என்னென்ன கொடுக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு, இலவச வேட்டி, சேலை, ரூ 3000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. எனவே இந்த பொங்கல் அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியான பொங்கலாக அமையும் என்கிறார்கள்.
தை மாதத்தில் கொண்டாடப்படும் பொங்கல், விவசாயிகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா. தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் பரிசுகளை வழங்குகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரையுடன் தலா ரூ.1,000 ரொக்கப்பணமும் பொங்கல் தொகுப்பில் சேர்க்கப்பட்டன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications