போனில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விஜய்.. நன்றி தெரிவித்து ட்வீட் போட்ட அன்புமணி ராமதாஸ்!
சென்னை: எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் நடிகர் விஜய்க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திங்கள் கிழமை (அக்.09) தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு அன்புமனி ராமதாஸ்க்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். மக்களவை சபாநாயாகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியே சுலே ஆகியோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

அதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜக தலைவர் அண்னாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். வாழ்த்துக்கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்தார். அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்ததாவது:-
எனது பிறந்தநாளையொட்டி கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவர்கள் சமூக ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அவர்கள் ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகத்தில் இன்று நிகழ்ந்த சந்திப்பின் போது எனக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆகியோருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொலைபேசி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று தெரிவித்து இருந்தார். அதேபோல், நடிகர் விஜய்யும் அன்புமணி ராமதாஸ்க்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
"எனது பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த நண்பர் நடிகர் விஜய்க்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியலில் எண்ட்ரி கொடுக்க போகிறார் என அவரது ரசிகர்கள் கூறி வரும் நிலையில், விஜயின் செயல்பாடுகள் அதை ஒட்டியே உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக முக்கிய அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு தானே தொலைபேசி வாயிலாக விஜய் வாழ்த்துகளை கூறி வருகிறார். சமீபத்தில் கூட விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த வகையில் எம்.பியும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ்க்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications