பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கம்.. அதிரடி காட்டிய ராமதாஸ்!
சென்னை: பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முரளி சங்கர் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார்.
பாமகவில் அதிகார மோதல் உச்ச கட்டத்தில் உள்ளது. அண்மையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி தானே பாமக தலைவர் என்றும் அறிவித்தார். இதனால், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மிகக் கடுமையான மோதல் வெடித்தது.

பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன்
டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியானதும், பாமக பொருளாளர் திலகபாமா, கட்சியில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது என்று அன்புமணிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு எதிர்வினையாற்றிய பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், "திலக பாமா நன்றியுணர்ச்சி இல்லாமல் பேசுகிறார், அவர் பதவி விலக வேண்டும்" என்று வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தார்.
அன்புமணியுடன் சேர்ந்தார்
அதன்பிறகு பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் அதிகரித்து, இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், ராமதாஸ் நடத்திய ஆலோசனைகளில் பங்கேற்கவில்லை.
அன்புமணி ராமதாஸ், சோழிங்கநல்லூரில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல் நாளில் பங்கேற்காத வடிவேல் ராவணன், இரண்டாவது நாளில் பங்கேற்றார். அதேசமயம், ராமதாஸ் நடத்திய ஆலோசனையில் பாமக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
நீக்கிய ராமதாஸ்
பாமகவில் அன்புமணி ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பாமக பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளின் பதவிகளைப் பறித்த ராமதாஸ், தமது ஆதரவாளர்களை அந்தப் பொறுப்பில் நியமித்து வருகிறார்.
அண்மையில், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தலைவரான வழக்கறிஞர் பாலுவை நீக்கிவிட்டு, வழக்கறிஞர் கோபுவை அந்தப் பொறுப்பில் நியமித்தார் ராமதாஸ். அந்தவகையில் தற்போது வடிவேல் இராவணன் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முரளி சங்கர் நியமனம்
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாமகவின் மாநிலப் பொதுச் செயலாளராக, முரளி சங்கர் இன்று முதல் (15.06.2026) நியமனம் செய்யப்படுகிறார். எனவே இவருக்கு நமது கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். அதோடு, "பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கண்டு பிடிப்போருக்கு ரூ.100 பரிசு தருவேன்" என்றும் ராமதாஸ் கூறி இருந்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications