பாமகவில் ட்விஸ்ட்! தொகுதிக்கு ஒரு தலைவர், ஒரு மாவட்ட செயலாளர்! களத்தில் இறங்கும் அன்புமணி ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் ஒரு தொகுதிக்கு ஒரு தலைவர், ஒரு மாவட்ட செயலாளர் என தமிழக முழுவதும் நியமிக்க பாமக தலைவர் டாக்டர் அன்பு மணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

மூட்டு வலியால் அவஸ்தைப் பட்டு வந்த அன்புமணி, மருத்துவமனையில் அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது நலமாக இருந்து வருகிறார் அன்புமணி. மருத்துவ மனையில் அட்மிட்டாகியிருப்பதை அறிந்து, அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் முதல்வர் விஜய்.

anbumani ramadoss PMK Anbumani Ramadoss

ஒரு தொகுதிக்கு ஒரு தலைவர், ஒரு மாவட்ட செயலாளர்

அப்போது, பாமகவை மையமாக வைத்து அரசியல் ரீதியாகவும் அவர்கள் பேசிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் வெளிப்படையாக இவர்கள் இருவரும் சந்திப்பார்கள் என்றும், அந்த சந்திப்பு நடப்பது அன்புமணியின் முடிவில் தான் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறது பாமக.

இதற்கிடையே, சமீபத்தில், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மா.செ. மற்றும் தலைவர்களை நியமித்தார் அன்புமணி. அதாவது, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மா.செ., ஒரு தலைவர் நியமிக்கப்பட்டனர். "இதே பாணியை தமிழகம் முழுவதும் நடைமுறைப் படுத்த வேண்டும்" என்று சௌமியா அன்புமணி உட்பட பாமகவின் மாநில நிர்வாகிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

சௌமியா அன்புமணி கோரிக்கை என்ன?

அதாவது, "அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தவெக அரசு திட்டமிட்டிருப்பதால், அந்த தேர்தலில், சென்னை உட்பட வடதமிழகத்தில் 50 சதவீத இடங்களை பாமக கைப்பற்ற வேண்டும். மேற்கு மாவட்டங்களில் 25 சதவீத இடங்களையும், தென் மாவட்டங்களில் 10 சதவீத இடங்களையும் கைப்பற்றியாக வேண்டும் என்கிற திட்டத்தில் இருப்பதால், தேர்தல் பணிகளை சிரமமின்றி செய்திட தொகுதிக்கு ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்குவது தான் சரியாக இருக்கும் என்ற யோசனையின் அடிப்படையில் தமிழம் முழுவதும் நடைமுறைப்படுத்த அன்புமணியிடம் இவர்கள் வலியுறுத்தியதன் பின்னணி.

உள்ளாட்சி தேர்தல் வேறு வருகிறது

உள்ளாட்சி தேர்தலில் கிடைக்கும் இத்தகைய வெற்றி தான் நாடாளுமன்ற தேர்தலின் போது பாமகவின் வலிமை பேசு பொருளாக இருக்கும். அதே சமயம், விசிகவின் அரசியலை சிதைக்கவும் முடியும் என்றும் பாமக ஆலோசனை செய்ததால் தான் பாமகவின் நிர்வாக அமைப்பில் இந்த மாற்றத்தை கொண்டு வர அன்புமணியிடம் வலியுறுத்தப்பட்டது " என்கிறார்கள் பாமகவினர்.

அன்புமணியும் இந்த கருத்தில் உடன்பட்டிருப்பதால், ஒரு தொகுதிக்கு ஒரு மா.செ. என்கிற கான்செப்ட்டினை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளாராம். இத்தகைய நடைமுறைகள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற விவாதமும் மாவட்ட நிர்வாகிகளிடம் நடந்து கொண்டிருக்கிறது.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+