என்ன இது உதயநிதிக்கு "ஃப்ரீ ஹிட்டா".. பார்த்து பார்த்து நிற்க வச்சு இருக்காங்களே? ஏதோ இடிக்குதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன மாயமோ.. மந்திரமோ தெரியவில்லை... திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு என்று செஞ்சு வச்சது போல சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வந்து அமைந்துள்ளது. இந்த அறிவிப்பில் சில விஷயங்கள்தான் புரியவே இல்லை.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பாக இளைஞரணி செயலாளர் உதயநிதி இந்த முறை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் போட்டியிடுவது கடைசி வரை சந்தேகமாகவே இருந்தது.

நிர்வாகிகள் பலர் இவரின் வருகையை விரும்பவில்லை என்றெல்லாம் செய்திகள் வந்த நிலையில் கடைசி நேர டிவிஸ்ட்டாக இங்கு உதயநிதி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஏன்

ஏன்

கட்சிக்குள் சிலர் உதயநிதிக்கு வாய்ப்பு கொடுத்தால் எங்களின் வாரிசுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியதாக செய்திகள் எல்லாம் வெளியானது. ஆனால் அந்த வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உதயநிதிக்கு திமுக சீட் கொடுத்துள்ளது. இதை திமுகவில் இப்போது வரை யாரும் எதிர்க்கவில்லை. மாறாக உதயநிதிக்கு மூத்த நிர்வாகிகள் எல்லோரும் வாழ்த்துதான் தெரிவித்துள்ளனர்.

சந்தேகம்

சந்தேகம்

நிலைமை இப்படி இருக்க களநிலவரமும் உதயநிதிக்கு சாதகமாகவே இருக்கிறதாம். திமுக இந்த தொகுதியில் எளிதாக வென்றுவிடும். எந்த கவலையும் இன்றி இங்கு திமுகதான் வெற்றிபெற போகிறது என்று அக்கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இங்கு அதிமுக கூட்டணியும் பெரிதாக வலிமையான நபர்களை நிற்க வைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

என்ன நிலைமை

என்ன நிலைமை

இங்கு அதிமுக கூட்டணியில் பாமக களமிறங்குகிறது. பாமக சார்பாக இங்கு ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுக்கிறார். ஒருவேளை இங்கு அதிமுக அல்லது பாஜக நின்றால் கூட திமுகவிற்கு வெற்றி கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் . உதயநிதிக்கு கொஞ்ச டஃப் பைட் இருக்கும்.

பாமக

பாமக

ஆனால் பாமக எல்லாம் சேப்பாக்கத்தில் இல்லவே இல்லை. பாஜக நின்றாலாவது அதிகபட்சம் இங்கு 10 ஆயிரம் வாக்குகள் வரை வாங்கும். ஆனால் பாமக இங்கு 3000 வாக்குகளை வாங்குவதே சந்தேகம்தான். அப்படி இருந்தும் இங்கு ஏன் பாமக களமிறக்கப்பட்டது என்று தெரியவில்லை.

சந்தேகம்

சந்தேகம்

இதனால் இங்கு உதயநிதி வெற்றிபெறுவது மிகவும் எளிதாகிவிட்டது என்று திமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். அதோடு இங்கு அதிமுக ஏன் நிற்கவில்லை என்று தெரியவில்லை. பாமகவை களமிறக்கியதால் களம் உதயநிதிக்கு சாதகமாகி உள்ளது. பாஜக சார்பாக குஷ்பு நின்று இருந்தால் அது நல்ல போட்டியாக இருந்திருக்கும்.

 இல்லை

இல்லை

அதுவும் நடக்கவில்லை. அதிமுக ஏன் இப்படி செய்தது என்றெல்லாம் தெரியவில்லை.. என்ன கணக்கு என்று புரியவில்லை. உதயநிதி வெற்றி உறுதியாகிவிட்டது என்று திமுக வட்டாரங்கள் சந்தோஷத்தில் தெரிவிகின்றன. ப்ரீ ஹிட்டில் பயமின்றி இறங்கி வந்து சிக்ஸ் அடிப்பது போல உதயநிதி டென்சன் இன்றி வேலை பார்க்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+