பாமகவை ஆட்சிக்கு கொண்டு வர மந்திரம்... அன்புமணி பேச்சு... அதிர்ச்சியில் அதிமுக

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    anbumani ramadoss latest speech | அன்புமணி பேச்சு... அதிர்ச்சியில் அதிமுக

    சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர தன்னிடம் மந்திரம் உள்ளதாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அன்புமணி, ஊக்கம் அளிக்கும் வகையிலும், உற்சாகம் தரும் வகையிலும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு நம்பிக்கையை விதைத்தார்.

    மேலும், அந்தக் கூட்டத்தில் அவர் பேசிய விவகாரம் தான் இப்போது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அன்புமணி பேச்சு

    அன்புமணி பேச்சு

    பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் இருந்தும் திரளானோர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய அன்புமணி மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் நம்மால் தான் கொண்டு வர முடியும் எனத் தெரிவித்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்தை முன்வைத்த அன்புமணி, இப்போது மீண்டும் அதே முழக்கத்தை முன்வைக்க ஆயத்தமாகிவிட்டார் போல் தெரிகிறது.

    ரகசிய மந்திரம்

    ரகசிய மந்திரம்

    மேலும், பாமகவை ஆட்சிக்கு கொண்டு வர தன்னிடம் வெற்றி மந்திரம் ஒன்று உள்ளதாகவும், ஆனால் அதை இப்போது தாம் கூறப்போவதில்லை என்றும் அன்புமணி பேசியுள்ளார். இந்தப் பேச்சு அதிமுக வட்டாரத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ளதாகவும், இந்தத் தேர்தலில் பாமகவுக்கு அதிக இடங்களை அதிமுக ஒதுக்கும் என தாம் நம்புவதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மாற்றம், முன்னேற்றம் பற்றி தாம் பேசியதை யார் எப்படி எந்த அர்த்தத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் எனவும் ஆனால் பாமகவால் மாட்டுமே செய்ய முடியும் எனக் கூறினார்.

    சட்டமன்றம்

    சட்டமன்றம்

    வரும் 2021 தேர்தலில் கணிசமான எண்ணிக்கையில் பாமக சார்பில் எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என அன்புமணி நினைப்பதாகவும், அதற்கான பணிகளை இப்போதே அவர் தொடங்கிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+