தமிழின துரோகிகள் யார்...? என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா - அன்புமணி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈழத்தமிழர்களுக்கு யார் துரோகம் செய்தது என்பது பற்றி தன்னுடன் விவாதிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயாரா என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஈழத்தமிழர்கள் வரலாறு பற்றி எந்த தகவலும் அறியாதவர் ஸ்டாலின் என்றும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் விவாதிக்க அழைப்பு விடுத்த நிலையில், அன்புமணி இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ஆட்சியில் இருந்தபோது ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சி திமுக என்றும், இப்போது ஈழத்தமிழர்கள் மீது அக்கறை உள்ளது போல் ஸ்டாலின் நடிப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது 3 மணி நேரம் நாடக உண்ணாவிரதம் நடத்திய கட்சி திமுக என அன்புமணி விமர்சித்துள்ளார்.

தெரிந்துகொள்ளுங்கள்

தெரிந்துகொள்ளுங்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஈழத்தை பற்றியோ, ஈழத்தமிழர்கள் பற்றியோ எந்த வரலாறும் தெரியாது எனவும், இதனால் கூட்டணிக் கட்சித் தலைவரான வைகோவிடம் கேட்டு ஈழத்தமிழர்கள் வரலாறை ஸ்டாலின் அறிந்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அன்புமணி.

வாழ ஆசை

வாழ ஆசை

இலங்கையில் இருந்து கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களில் இன்னும் பலர் அங்கு குடியுரிமை பெறாமல் இருப்பதாகவும், இதற்கு காரணம் அவர் என்றாவது ஒருநாள் சொந்தமண்ணிற்கு திரும்பி பழைய நிலபுலன்களுடன் வாழ வேண்டும் என அவர்கள் நினைப்பதாகவும் அன்புமணி கூறியுள்ளார். இப்படி எதைப்பற்றியும் தெரியாத ஸ்டாலின் பாமக வை பற்றி குறைகூறுவதாக ஆவேசம் காட்டியுள்ளார் அன்புமணி.

விவாதிக்க தயாரா?

விவாதிக்க தயாரா?

ஈழத்தமிழர்கள் பற்றி திமுக பேசக்கூடாது என்றும், அவர்களுக்காக ஒரு துளி நன்மை கூட செய்யாத கட்சி திமுக எனவும் குற்றஞ்சாட்டியுள்ள அன்புமணி, மேலும் இது பற்றி விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+