சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாவ்.. இதை பாருங்க.. இந்திய கிரிக்கெட் அணிக்கு அன்புமணி சொன்ன அசத்தல் வாழ்த்து!

ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாமகவை சேர்ந்த எம்.பி அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    India vs Australia test Series | தொடரை வென்று சாதனை படைத்த இந்தியா | Oneindia Tamil

    சென்னை: ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பாமகவை சேர்ந்த எம்.பி அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா சென்ற கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

    PMK MP Anbumani Ramadoss wishes Indian Cricket team for Series victory against Aussie

    ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் துவம்சம் செய்துள்ளது. இதன் மூலம் விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை சீரிஸ் வெற்றிகொண்ட முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்காக உலகம் முழுக்க இந்திய அணியை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். பாமக இளைஞரணி தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் டிவிட் செய்துள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இருக்கும் இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் தனது டிவிட்டில் ''ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றியை பதிவு செய்த இளமையான துடிப்பு மிக்க இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். அன்புமணியின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

    எம்.பி அன்புமணி ராமதாஸ் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடக்கும் பெரும்பாலான போட்டிகளை இவர் நேரில் கண்டுகளித்துள்ளார்.

    English summary
    PMK MP Anbumani Ramadoss wishes Indian Cricket team for Historical Series victory against Aussie.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X