அப்பா Vs மகன்..வன்னியர் சங்கம் வரை வம்பு.. திண்டிவனம் அலுவலகத்துக்கு சீல் வைத்த வருவாய் துறையினர்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அன்புமணியைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார் ராமதாஸ். இந்த நிலையில் வன்னியர் சங்க அலுவலகத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் வருவாய்த் துறை அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாகவே பாமகவில் ஏதாவது ஒரு பிரச்சனை முளைத்துக்கொண்டே இருக்கிறது. அன்புமணி ராமதாஸ் நீக்கத்தில் ஆரம்பித்து தற்போது ஒழுங்கு நடவடிக்கைக் குழு விளக்கம் வரை ஏராளமான பிரச்சனைகளைப் பாமக பார்த்துவிட்டது.
முதன்முதலாக வன்னியர் சங்க மாநாட்டுக்கு முன்னதாகத்தான் அதிரடியைத் தொடங்கினார் ராமதாஸ். அதற்கு முன் கட்சியின் முகமாக, எதிர்காலமாக முன்னிறுத்தப்பட்டிருந்தார் அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் வன்னியர் சங்க மாநாடு நடந்தபோது திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாகவும் அவரைச் செயல் தலைவராக நியமிப்பதாகக் கூறி அதிர வைத்தார்.

பாமக மோதல்
தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திலகபாமா, வடிவேல் ராவணன் உள்ளிட்டோரின் பதவிகளும் பறிக்கப்பட்டன. தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து நீக்கப்பட்டனர். ஆனால் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என முடிவு செய்த அன்புமணி ராமதாஸ் கட்சியின் தலைவர் நான்தான் எனக் கூறி வந்தார். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம், மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த பொதுக்குழு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் என அன்புமணி தனது பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ராமதாஸ் அன்புமணி
இதற்கு நீதிமன்றம் வரை சென்று தடை கேட்டும் ராமதாஸ் தரப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இரு தரப்பும் பொதுக்குழு கூட்டத்தை நடத்திய நிலையில் அதில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ராமதாஸ் தரப்பு. இது தொடர்பாக அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும், இருமுறை அவகாசம் அளித்தும் அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ்.
வன்னியர் சங்கம்
ஆனால் ராமதாஸின் அறிவிப்பு அன்புமணியைக் கட்டுப்படுத்தாது என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். இந்த நிலையில் திண்டிவனம் மயிலம் சாலையில் அமைந்துள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள். ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதல் தான் இந்த விவகாரத்திற்கு மூல காரணம். வரும் செப்டம்பர் 17ஆம் தேதி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டிவனம் வன்னியர் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
வன்னியர் சங்க அலுவலகம் சீல்
கடந்த ஆண்டு வரை ராமதாஸும் அன்புமணியும் இணைந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இந்த ஆண்டு இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் வன்னியர் சங்க அலுவலகத்திற்குச் சென்ற அன்புமணி ஆதரவாளர்கள் இரண்டு நாட்களாகப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதை அடுத்து அங்கு சென்ற ராமதாஸின் ஆதரவாளர்கள் அந்த அலுவலகத்தின் முகப்பில் புதிய கதவு ஒன்றை அமைத்துப் பூட்டுப் போட்டனர். இரு தரப்பிலும் அங்கு ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாமக தலைமை
தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், இரு தரப்பும் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வன்னியர் சங்கம் தங்கள் தரப்புக்குத்தான் சொந்தம் என உரிமை கோரினர். இரு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், வன்னியர் சங்க தலைமை அலுவலகத்திற்கு நேற்று இரவு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் நிலையில் பரபரப்பு நிலவுகிறது. நீதிமன்றம் மூலம் அந்த அலுவலகத்துக்கான உரிமையைப் பெற இருதரப்பும் முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது.
-
அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட்? அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்.. அடுத்து அன்புமணியுடன் மீட்டிங் -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications