ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி!
சென்னை: ரூ.10க்கு சோறு, சாம்பார், ரசம், தயிர், கூட்டு, பொறியல், ஊறுகாய் உடன் நிறைவான மதிய உணவு வழங்கப்படும் என்றும் ஞாயிறு அன்று ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்கப்படும் என்றும் பாமக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏழைத் தொழிலாளர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய 'மக்கள் உணவுத் திட்டம்' செயல்படுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திமுக, அதிமுக, தவெக, நாதக என பிரதானமாக நான்கு முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக 18 தொகுதிகள் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
பாமக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்
* குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.2,000
* தனியார் மற்றும் அரசு துறையில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
* வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000
* கல்விக்கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* பட்ஜெட்டில் 25% வேளாண் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கப்படும்
* தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு
* 125 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டு, விவசாய பணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
* சாதிவாரி கணக்கெடுப்பு
* 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி
* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு மட்டுமாவது விலக்கு பெற பா.ம.க. தொடர்ந்து போராடும்.
* தமிழ்நாட்டின் 2-வது தலைநகரம் திருச்சி
*ரூ.10க்கு சோறு, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், ஊறுகாய் உடன் நிறைவான மதிய உணவு
* ஞாயிறு அன்று ரூ.25க்கு அசைவ மதிய உணவு வழங்க 'மக்கள் உணவுத் திட்டம்' தொடங்கப்படும்.
* ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைக்கு 2 கிலோ நாட்டு சர்க்கரை வழங்கப்படும்.
உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications