எதிர்க்கும் திருமாவளவன், அன்புமணி.. கைவிரித்த திமுக, அதிமுக.. விஜய் பக்கம் நகரும் ராமதாஸ் தரப்பு?
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திமுக கூட்டணியில் சேர்க்க திருமாவளவனும், அதிமுக கூட்டணியில் சேர்க்க அன்புமணியும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தவெக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக செங்கோட்டையன் மூலம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்து களமிறங்குவோம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் விஜய் தனித்தே களமிறங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் செங்கோட்டையன் மூலமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணி பக்கம் சென்றார்.

இதனால் தவெக தொண்டர்கள் சோகம் அடைந்துள்ளனர். அதேபோல் பாமக ராமதாஸ் தரப்பு திமுக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் பாமக ராமதாஸ் தரப்புடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 14 ஆண்டுகளுக்கு முன் விசிக எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று திருமாவளவனும் தீர்க்கமாக கூறிவிட்டார்.
மறுபக்கம் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணி, ராமதாஸ் அணியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று கூறி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமியும் சைலண்ட் மோடுக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக ராமதாஸ் அணி யாருடன் கூட்டணி அமைப்பது என்று தெரியாமல் திண்டாடி வருகிறது. அதேபோல் ராமதாஸ் அணிக்கு தேர்தலின் போது சில விட்டமின் எம் கொடுக்கவும் திமுக தயாராக இருக்கிறது.
இந்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைவிரித்த நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக அடுத்ததாக விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் மூலமாக ராமதாஸ் தரப்பு பாமகவை அணுக விஜய் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
ஒருவேளை எல்லாம் சரியாக கைகூடினால், தவெக தலைவர் விஜய் விரைவில் தைலாபுரம் சென்று ராமதாஸிடம் ஆசி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமதாஸ் தரப்பு பாமகவுடன் தவெக தலைவர் விஜய் கைகோர்த்தால், வட மாவட்டங்களில் விஜய்க்கு கணிசமான ஆதரவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்












Click it and Unblock the Notifications