Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை டூ மதுரைக்கு ரூ 4999! ஆம்னி பஸ்ஸில் பயணிப்போர் யாரும் பணக்காரர் இல்லை.. ராமதாஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகைகளுக்கு முன்பு ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல் பயண கட்டத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டன என ராமதாஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் உயர்த்தப்படுவதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக தனியார் பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னை - மதுரைக்கு இன்று பயணிக்க அதிகபட்சமாக ரூ.4999 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணக் கொள்ளை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டன. கட்டணக் கொள்ளை குறித்து எவரேனும் புகார் அளித்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என போக்குவரத்துத் துறை கூறுவது பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல்.

ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகள்

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்திருக்கிறது. அதற்கு மாறாக ஆம்னி பேருந்து சங்கங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள போக்குவரத்துத் துறை அனுமதிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

ஆம்னி பேருந்தில் பயணிப்போர் பணக்காரர்களா

ஆம்னி பேருந்தில் பயணிப்போர் பணக்காரர்களா

ஆம்னி பேருந்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. ஆம்னி பேருந்துகள் அதிக லாபம் ஈட்ட பொதுமக்களை கசக்கிப் பிழிய அனுமதிக்கக் கூடாது. ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதற்காக சட்டப்பூர்வ ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என ராமதாஸ் காட்டமாக பதிவிட்டுள்ளார். v

ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை

ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளன. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ் , புத்தாண்டு பண்டிகை, அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பலர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கிறார்கள்.

ஆம்னி பேருந்துகள் ஏன்

ஆம்னி பேருந்துகள் ஏன்

பலர் ரயில்களில் டிக்கெட் போட்டு பயணித்தாலும் டிக்கெட்டு கிடைக்காத நிலையில் ஆம்னி பேருந்துகளை பயணிகள் நாடுகிறார்கள். அரசு பேருந்துகள் இருக்கும் போதிலும் ஒரு சில வசதிகளுக்காக மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ஆம்னி பேருந்துகளையே நம்புகிறார்கள். அப்படியிருக்கும் போது இது போன்ற பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+