திரிஷா விவகாரம்.. தமிழக பெண் தெய்வங்களிடம் நயினார் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. ராமதாஸ் அட்வைஸ்
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக - பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது. அதனுடன் தவெக மீதும் விமர்சனம் வைக்கின்றனர். விஜய் - த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் அநாகரீகமாக விமர்சத்தது சர்ச்சையையும், கண்டனத்தையும் கிளப்பியுள்ளது. நயினார் நாகேந்திரன் தமிழக பெண்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும் என்று பாமக ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் முன்னெடுப்பாக சேலத்தில் தவெக தலைவர் விஜய், சீலநாயக்கன்பட்டி அருகே தாளமுத்து பகுதியில் தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜய், 'என்னை வீட்டை விட்டு வெளியே வா என்கிறார்கள்; என் வீடு எது தெரியுமா? தமிழ்நாடுதான் என் வீடு. 8 கோடி தமிழக மக்களும் தான் என் குடும்பம்.

நயினார் கருத்துக்கு எதிர்ப்பு
அவர்களுடன் முதல் படை வீரனாக நிற்பதே எனது குறிக்கோள். நான் வாக்கு கேட்க வரவில்லை. மக்களுக்காக நீதி கேட்க வந்துள்ளேன். மற்ற கட்சிகளுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகின்ற நிலையில் எனக்கு தடைகள் விதிக்கப்படுகிறது. கூட்டணிகளை மட்டும் நம்பி இருக்கக் கூடிய 50, 70 வருட கட்சினு ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மீறி, இன்றைக்கு களத்தில் தமிழகத்தில் 30 சதவீத வாக்கு வங்கியுடன் முதன்மை சக்தியாக தவெக உள்ளது' என்றார்.
திரிஷாவை விட்டு விஜய் வரணும்
விஜய்யின் இக்கருத்திற்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, 'அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் தான் என்ன நடக்கிறது என்பது தெரியும்' என்றார்.
கடந்த 2023-ம் ஆண்டு குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்கு. தற்போது பாஜகவில் உள்ள குஷ்பு கொதித்தெழுந்து பெண்களை பற்றி தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக்கூடாது வந்தால் அடிப்போம் என்றார். ஆனால் இது குறித்து அவர் கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. அதே நேரம் கனிமொழி எம்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பெண் தெய்வங்களிடம் வருத்தம்
பெண்களுக்கு உரிய மரியாதையையும், அவர்களுக்கான சமூக அந்தஸ்தையும் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.vநாட்டை தாய்நாடு என்றும், நதிக்கும், நெல்லும் பெண்களின் பெயரை வைப்பது மட்டும் பெருமையல்ல. மூத்த அரசியல்வாதியாகவும், தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவாராக உள்ள நயினார் நாகேந்திரன் தன் பேச்சுக்கு தமிழக பெண் தெய்வங்களிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பதுதான் அரசியல் நாகரீகமாகும்.
நாட்டின் ஆணிவேர் பெண்கள்
நான் எப்போதும் பெண் குழந்தைகளை பிறந்தது முதல் 19 வயது வரை பெண் தெய்வங்கள் என்றும் 19 வயதிற்கு மேல் தேவதைகள் என்றும் சொல்லி வருகிறேன். பெண்களே இந்நாட்டின் ஆணிவேர். அவர்களை மதித்திடுங்கள். அதன் பின் 'பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் இல்லாத தமிழ்நாடு உருவாக்க வேண்டும் இதுதான் பாஜகவின் கனவு என்று சொல்லுங்கள்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications