போராடாமல் எதுவும் கிடைக்காது.. மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள் - பாமக நிறுவனர் ராமதாஸ் மடல்
சென்னை: வாக்குக்கு இப்போதே மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே, இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு 2 மாதங்களே உள்ளன. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகங்களில் பரபரப்பாக உள்ளனர். பாமகவில் தந்தை மகன் பனிப்போர் வெடித்து கொண்டிருக்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையே தொடர்ந்து பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டு, ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

பாமகவில் நிலவும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்து, அவர்களை தங்கள் கூட்டணியில் உறுதிபடுத்தும் வேலையில் அதிமுக - பாஜக இறங்கியுள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதுகுறித்து நேரடியாகவே பாஜக நிர்வாகிகளிடம் பேசியுள்ளார். ஆனாலும், கூட்டணி குறித்து ராமதாஸ் இதுவரை மெளனம் கலைக்காமல் உள்ளார்.
இதுதான் சரியான தருணம்
இந்நிலையில், இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு மடல் ஒன்றை எழுத்தியுள்ளார்.
அதில், பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதாவது: என் உயிரினும் மேலான, என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே வணக்கம் நான் நலம்! நீங்கள் நலம்தானே...?. நான் பொது வாழ்விற்கு வந்த போது கிராமத்திற்கு 25 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று அன்றே சொன்னேன்.
மயத்தில் இருந்து தெளிய..
ஆனால் மக்களின் வாழ்கைத் தரம் உயரவும் சமூக ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவ சமூகம் உருவாக்க சமூக நீதி பற்றிய தெளிவில்லாத ஆட்சியாளர்கள் போதைக்கும், இலவசத்திற்கும் மக்களை அடிமைப்படுத்திவிட்டனர். தமிழகத்தில் தற்போது நாள்தோறும் பல்வேறு துறையினர் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதனைக் காதுகொடுத்து கேட்கக்கூட நாதியில்லை. ஆனால் வாக்குக்கு இப்போதே மறைமுகமாக பணம் கொடுக்கவும், செய்த ஊழலில் உங்களையும் உட்படுத்தவும் முயற்சிக்கின்றனர். எனவே இதுவே சரியான தருணம். மயக்கத்திலிருந்து தெளிந்து வாருங்கள். நாம் ஒருங்கிணைந்து போராடுவோம். கடந்த காலங்களில் நாம் போராடித்தான் உரிமைகளைப் பெற்றோம். இங்கு போராடாமல் எதுவும் கிடைக்காது.
சாதிவாரி கணக்கெடுப்பு
வரும் தேர்தலில் அரசியல் அதிகாரம் பெற்று சாதிவாரிக் கணக்கெடுத்து அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் கிடைக்க ஆவன செய்வோம். மனித வளத்தை மேம்படுத்த, சமூக ஒற்றுமையை வளர்க்க, ஊழலையும், துரோகத்தையும் துடைத்தெரிய சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோம்.
நம்மை நாமே தூற்றிக்கொள்வது நம்மை மயக்கம் தெளியாமல் பார்த்துக்கொள்வோருக்கு ஆதாயம் கிடைக்க வழிவகுக்கும். புரிந்துகொண்டு என்னுடன் தொடர்ந்து பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து உங்களோடு பேசுவேன் என்று தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications