சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நத்தமேடுவாக்குச்சாவடிகளில் பாமகவினர் முறைகேடு... திமுக சார்பில் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: தருமபுரி மாவட்டத்தில் நத்தமேடு பகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் திமுக முகவர்களை உள்ளே அனுமதிக்காமல் பாமகவினர் கைப்பற்றியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் திமுகவின் சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.

இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் நேற்று லோக் சபா தேர்தல் 38 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. இந்தநிலையில், திமுகவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள புகாரில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள நத்தமேடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பல அத்துமீறல்கள் நடைபெற்றது அம்பலமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

PMK Refuses to Vote In Nathamedu Booths, DMK Complaint

இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் பீதி.. காவல்துறையின் சேவகம் யாருக்கு? ஸ்டாலின் கேள்வி இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் பீதி.. காவல்துறையின் சேவகம் யாருக்கு? ஸ்டாலின் கேள்வி

மேலும், குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த ஏஜெண்டுகள் வாக்களிக்க வருபவர்களிடம் கையில் மை மட்டும் வைத்துவிட்டு, அவர்களின் வாக்குகளை ஏஜெண்டுகள் போட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதேபோல, வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு தரப்பு கட்சிக்கு மட்டுமே, வாக்குகள் விழுவதாகவும் புகார்கள் எழுந்தன. இன்னொருபுறம், வாக்குச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கேமரா வேறுபுறமாக திருப்பிவிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, அத்தொகுதி திமுக வேட்பாளர் இதுதொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், புகாரை பெற்று கொண்டுள்ள தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளனர்.

English summary
Lok sabha elections 2019: PMK Refuses to Vote In Nathamedu Booths - DMK Complaint
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X