சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் போட்டி.. 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பாமக

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமக முதற்கட்டமாக 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். அதில் பாமகவுக்கு தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம்,கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

PMK releases first set of candidates list

இந்த நிலையில் அமமுக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை இன்று அறிவித்தது. அது போல் பாமகவும் முதற்கட்டமாக 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு நிகழ்ச்சியை பாமகவும் தேமுதிகவும் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?வடசென்னை, கள்ளக்குறிச்சி.. திமுக- தேமுதிக நேரடி மோதல்.. தேமுதிக நிச்சயம் அவுட்?

பாமக போட்டியிடும் தொகுதிகளும் வேட்பாளர்களும்:

தருமபுரி- அன்புமணி ராமதாஸ்

அரக்கோணம்- ஏ கே மூர்த்தி

கடலூர் - கோவிந்தசாமி

மத்திய சென்னை - சாம் பால்

விழுப்புரம்- வடிவேல் ராவணன்

திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்ல.

English summary
PMK releases first set of Loksabha candidates list. Anbumani is again contesting in the same LS constituency which he won in 2014 election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X