Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 தொகுதியிலும் பாமக தோல்வி! இழந்தது திரும்பவும் கிடைக்காது! ஆனாலும் "பாட்டாளிகளுக்கு" ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை அடைந்ததால் மாநில கட்சி அந்தஸ்தை திரும்ப பெற முடியாது என்றாலும் அக்கட்சியினருக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது.

1989 களில் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக வன்னியர் சங்கத்தை தொடங்கினார். அது பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்றானது. இந்த கட்சிக்கு 1990 களில் யானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

lok sabha election results 2024 pmk tamil nadu 2024

இதையடுத்து 1998 முதல் மாம்பழச்சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த கட்சி தமிழக சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவார்.

இந்த கட்சி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்துவிட்ட நிலையிலும் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இருந்து மாம்பழச் சின்னத்தில் போட்டியிட இந்த கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து இந்த கட்சி போராடி வருகிறது. இந்த கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2004 - 2010 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தார். 2004 முதல் 2009 வரை சுகாதார நலத் துறை அமைச்சராக இருந்தார். அப்போதுதான் அவர் 108 ஆம்புலன்ஸ் திட்டம், சிகரெட், மதுவில் எச்சரிக்கை வாசகம் எழுதப்பட்டிருப்பது, போலியோ ஒழிப்பு உள்ளிட்ட திட்டங்களை ஏற்படுத்தியுள்ளார்.

1989 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்டதுமே அந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டு பண்ருட்டி தொகுதியில் பண்ருட்டி ராமசந்திரன் மட்டும் வென்றார்.

1996 ஆம் ஆண்டு லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வாழப்பாடி ராமமூர்த்தி திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 20 லோக்சபா தொகுதிகளிலும் 104 சட்டசபை தொகுதிகளிலும் பாமக போட்டியிட்டது. பிறகு 4 சட்டசபை இடங்களில் வென்றிருந்தது. 1998 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் 4 இடங்களில் வென்றது.

1999 நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 8 இடங்களில் 5 இடங்களில் பாமக வென்றது. 2001 சட்டசபை தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 20 தொகுதிகளில் வென்றது. 2004 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் வென்றது. அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 18 இடங்களில் வெற்றி பெற்றது.

2009 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டும் வென்றது.

2014 லோக்சபா தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி மட்டும் வென்றார். 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 232 தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதிகள் போட்டியிட்ட பாமக அனைத்திலும் தோல்வியையே அடைந்தது. அப்போது அதிமுகவுடனான ஒப்பந்தத்தின் படி அன்புமணி ராஜ்யசபா எம்பியானார்.

2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்டதில் அனைத்திலும் தோல்வி அடைந்தது. சவுமியா அன்புமணி போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் மட்டும் கடைசி வரை போட்டி இருந்தது.

இந்த தேர்தலில் பாமக வென்ற மொத்த வாக்குகள் 18,79,689 பெற்றுள்ளது. அது போல் 4.32 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளன. எனினும் வடதமிழகத்தில் மட்டும் 4 முதல் 5.5 சதவீத வாக்குகளை பாமக தக்க வைத்துள்ளது. மாநில அங்கீகாரத்தையும் பாமக இழக்க நேரிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+