5 ஸ்டார் இல்லைனா பரவால்ல..ஒரு 4 ஸ்டார்..3 ஸ்டார்? இறங்கி வந்த அய்யா! திருமாவுக்காக திமுக வெயிட்டிங்!
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இதனால் மாற்று கூட்டணி தேட வேண்டிய நிலை ராமதாஸுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி அவருக்கு ஒரு ஆப்ஷனாக இருக்கும் நிலையில் விசிக திருமாவளவன் முரண்டி பிடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரைச் சமாதானப்படுத்த ராமதாஸ் தரப்பு இறங்கி இருக்கிறது. அதனால் தான் திருமாவளவன் ராமதாஸின் வளர்ப்பு மகன் என பேசி இருக்கிறார் அருள் என்கின்றனர்.
2026 தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில், மேலும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக - பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், அன்புமணியை கூட்டணியில் இணைத்த விதம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாற்றாக, திமுக கூட்டணியில் இணைவதே தன்னுடைய அரசியல் எதிர்காலத்துக்கு பாதுகாப்பான பாதை என ராமதாஸ் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாமக கூட்டணி குழப்பம்
அதற்காக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன், ராமதாஸ் தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக மற்றும் விசிக இரண்டும் இணைந்து போட்டியிட்டன. ஆனால், 2012-ஆம் ஆண்டு தருமபுரியில் நடைபெற்ற சாதி கலவரத்திற்குப் பிறகு, பாமக - விசிக இடையிலான அரசியல் உறவு முற்றிலும் முறிந்தது.
ராமதாஸ் திமுக பேச்சுவார்த்தை
அதன் பின்னர், இரு கட்சிகளும் தனித்தனியாக பயணித்து வருகின்றன. பாமக தலித்துகளுக்கு எதிரான வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறது என தொடர்ந்து விமர்சித்து வரும் திருமாவளவன், பாமக இடம்பெறும் எந்த கூட்டணியிலும் விசிக இடம் பெறாது என்று வெளிப்படையாகவே கூறி வந்துள்ளார். இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்காகத்தான், ராமதாஸ் தரப்பு தற்போது திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
திருமாவளவன் விசிக நிலைப்பாடு
அதன் வெளிப்பாடாகத்தான், நேற்று பேசிய பாமக எம்எல்ஏ அருள், "திருமாவளவன் ராமதாஸின் வளர்ப்பு மகன்" என கூறி கருத்து வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. இது, விசிக தலைமையை மென்மையாக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் பேசப்பட்ட வார்த்தைகளாகவே பார்க்கப்படுகிறது. ராமதாஸின் அரசியல் நிலையைப் பார்க்கும்போது, தற்போதைய சூழலில் அவருக்கு உண்மையில் இருக்கும் ஒரே கூட்டணி வாய்ப்பு திமுக மட்டுமே என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
திமுக கூட்டணி
ஏனெனில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், அந்த கூட்டணியில் அவருக்கு அதிகபட்சமாக 20 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என கணிக்கப்படுகிறது. அதே அளவிலான தொகுதிகளை தமக்கும் ஒதுக்க வேண்டும் என ராமதாஸ், திமுக தரப்பிடம் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இடம் பெற்றுள்ளதால், தொகுதி பங்கீடு கடும் சிக்கலாக உள்ளது.
ராமதாஸ் கூட்டணி
இந்த நிலையில், ராமதாஸ் கூட்டணிக்குள் வந்தால், அவருக்கு கொடுக்கும் அளவுக்கு தங்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என மற்ற கூட்டணிக் கட்சிகள் கோரிக்கை விடுக்கக் கூடும். இது கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், ராமதாஸ் தரப்பை திமுக தலைமை தற்போது ஓரங்கட்டியே வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை உணர்ந்த ராமதாஸ் தரப்பு, அதிக தொகுதிகள் அல்லாமல் குறைந்த அளவிலான தொகுதிகளே போதும் என்றும், விசிகவுடன் ஏற்படும் பிரச்சினைகளை தாங்களே பேசி சரி செய்து கொள்கிறோம் என்றும் திமுக தரப்பிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
திமுக - விசிக- பாமக
அதன் தொடர்ச்சியாகத்தான், விசிக தலைவர் திருமாவளவனை மென்மையாக அணுகும் வகையில், பாமக எம்எல்ஏ அருள் நேற்று அந்த சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த பின்னணியில், 2026 தேர்தலை முன்னிட்டு அதிமுக - பாமக-பாஜக, திமுக - விசிக- பாமக கூட்டணி என பல அரசியல் கணக்குகள், தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
Tamil Nadu Monthly Electricity Bill System: மாதாந்திர மின் கட்டணம் எப்போது? விஜய்க்கு ராமதாஸ் கேள்வி -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications