பாமக இருந்தா "நோ".. உறுதியாக சொன்ன திருமா! எல்லாமே வதந்தி.. உடைத்த அன்புமணி.. ஆஹா திமுக ரூட் கிளியர்

நாடாளுமன்ற தேர்தலின் போது இதனால் பாமக என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விசிக எம்பி திருமாவளவன் நேற்று பேசியதற்கு எதிர் வினையாக இன்று அன்புமணி இப்படி பேசி உள்ளார். இது ஒரு வகையில் திமுகவிற்கான சிக்கலை சரி செய்துள்ளது.

தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பமாக பாமக, அதிமுக இடையே கடந்த சில காலமாக மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் பாமக - அதிமுக மீண்டும் கூட்டணி வைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.

சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார்.

 திமுக ஆதரவு

திமுக ஆதரவு

இந்த நிகழ்வில் பேசிய ராமதாசும், விடியலுக்காக நாம் காத்திருக்கிறோம். விடியலுக்கு வெகு நேரம் இல்லை. பாமகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். நம் மக்கள் பாமகவின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு நம்முடைய மிகப்பெரிய சாதனை. அந்த உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த நாம் பாடுபட வேண்டும். அதை கொண்டு வர போதிய அழுத்தத்தை நாம் கொடுக்க வேண்டும், என்று ராமதாஸ் பேசி இருந்தார். இவர்கள் இருவரின் பேச்சிலும் திமுகவை விமர்சனம் செய்யவில்லை. பொதுவாக பாமக பொதுக்குழுவில் பாமக ஆளும் கட்சி கூட்டணியில் இல்லை என்றால், ஆளும் கட்சியை பாமக கடுமையாக விமர்சனம் செய்யும்.

சந்தேகம்

சந்தேகம்

ஆனால் இந்த முறை பாமக திமுகவை விமர்சனம் செய்யவே இல்லை. மாறாக விடியலுக்காக காத்திருக்கிறோம்.. விடியல் வெகு தொலைவில் இல்லை என்று கூட்டணிக்கு சிக்னல் கொடுப்பது போல பேசி இருக்கிறார் ராமதாஸ். அதிமுகவை கடுமையாக எதிர்க்கும் பாமக, ஏற்கனவே திமுகவுடன் நெருங்கி வருவதாக ஒரு பிம்பம் உள்ளது. இந்த நிலையில்தான் பொதுக்குழு கூட்ட பேச்சு.. திமுக + பாமக கூட்டணிக்கான விதையாக அமையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.

விசிக

விசிக

இந்த நிலையில் பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். நேற்று சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா இதை தெரிவித்தார். அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும். அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார்.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில்தான் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விசிக எம்பி திருமாவளவன் நேற்று பேசியதற்கு எதிர் வினையாக இன்று அன்புமணி இப்படி பேசி உள்ளார். இது ஒரு வகையில் திமுகவிற்கான சிக்கலை சரி செய்துள்ளது. சேலத்தில் அன்புமணி பேசுகையில், திமுகவுடன் கூட்டணியா? அதெல்லாம் வதந்தி. திமுக கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது பாமக தலைமையில்தான் கூட்டணி அமையும். திமுகவுடன் கூட்டணி என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்தலுக்கு 5 மாதம் முன்னரே பாமக நிலைப்பாட்டை தெரிவிப்போம், என்றுள்ளார்.

திமுக ரூட் கிளியர்

திமுக ரூட் கிளியர்

இதனால் கிட்டத்தட்ட திமுக ரூட் கிளியர் ஆகி உள்ளது. ஏனென்றால் திமுகவுடன் பேச்சு இல்லை என்று பாமக வெளிப்படையாக சொல்லிவிட்டது. இது ஒரு வகையில் விசிகவை அசுவாசப்படுத்தும். விசிக - திமுக இடையே இதனால் கசப்பு எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதோடு திமுக-- விசிக கூட்டணியும் இதனால் உடையாமல் எப்போதும் போல இருக்கும். திமுகவிற்கு இது வாக்கு வங்கி ரீதியாக பலன் அளிக்கும். பாமக இல்லாமல் திமுக வன்னியர் வாக்குகளை பெற்று இருக்கிறது. ஆனால் விசிக இல்லாமல் தாழ்த்தப்பட்டோர் வாக்குகளை பெறுவது கடினம். அந்த வகையில் பாமகவுடன் சேராமல் விசிகவுடனே இருப்பது ஒரு வகையில் திமுகவிற்கு சாதகமாகவே இருக்கும்.

பாமக என்ன செய்யும்

பாமக என்ன செய்யும்

இப்போது பாமக என்ன செய்யும் என்பதே கேள்வியாக உள்ளது. பாமக திமுகவுடன் சேரவில்லை என்றால் எங்கே செல்லும். ஏனென்றால் அதிமுகவுடன் செல்ல முடியாது. ஏனென்றால் தங்கள் தலைமையிலேயே கூட்டணி என்று பாமக கூறி உள்ளது. ஆனால் அதிமுக பாமகவை கூட்டணியின் தலைமையாக ஏற்றுக்கொள்ளாது. மூன்றாவது கூட்டணி அமைக்க வேண்டும் என்றால் காங்கிரஸ், தேமுதிக போன்ற கட்சிகள் வராது. பாஜகவும் அதிமுகவை விட்டுவிட்டு பாமக தலைமையை ஏற்க வருமா என்று தெரியவில்லை. அப்படி இருக்கையில் பாமக 2024, 2026 தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+