'திமுகவின் முதல் குடும்ப மோதல் பற்றி பேசினால்'.. தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை.. பாமக கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் வராத தொழில் முதலீடுகளை வந்ததாகக் கூறி மோசடி செய்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த வினாவுக்கு விடையளிக்க முடியாத திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பா.ம.க. தலைவர் மீது தனிமனித விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு நாவடக்கம் தேவை என பாமக செய்தித் தொடர்பாளர் பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்
பாமக செய்தித் தொடர்பாளர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் வராத தொழில் முதலீடுகளை வந்ததாகக் கூறி மோசடி செய்திருப்பதை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், அது குறித்த வினாவுக்கு விடையளிக்க முடியாத திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், பா.ம.க. தலைவர் மீது தனிமனித விமர்சனத்தில் ஈடுபட்டிருக்கிறார். விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள முடியாத அரசியல் கோழை தயாநிதி மாறன், அவரது அதிகாரத் திமிரை காட்ட முற்படுவது கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ரூ.11.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் வந்திருப்பதாகவும், அதன்மூலம் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் திமுக பொய்ப் பரப்புரை செய்து வரும் நிலையில், அவ்வளவு முதலீடுகள் வரவில்ல்லை என்பதையும், வெறும் 8.8% முதலீடுகள் மட்டுமே வந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்களுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் ஆவணம் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். திமுக அரசின் பொய் முதலீடுகள் என்ற தலைப்பிலான அந்த ஆவணம் வெளியானதில் இருந்தே தங்களின் மோசடி அம்பலமாகி விட்டதால் திமுகவினர் எதை எதையோ உளறத் தொடங்கி விட்டனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறனிடம், திமுகவின் தொழில் முதலீட்டு மோசடிகள் குறித்து வினா எழுப்பினர். அதற்கான பதில் இருந்தால் அதை தயாநிதி மாறன் கூறியிருக்கலாம்; இல்லாவிட்டால் என்னிடம் பதில் இல்லை என்று கூறி கடந்து சென்றிருக்கலாம். ஆனால், அதை விடுத்து,''அவரை முதலில் அவங்க அப்பாவை பார்க்கச் சொல்லுங்க'' என்று கூறியுள்ளார். இது அநாகரீகத்தின் உச்சம். திமுகவினரின் ரத்தத்தில் ஊறிய கலாச்சாரத்தை அப்படியே அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தயாநிதி மாறனின் குடும்பத்திலும், அவர் சார்ந்த திமுகவின் முதல் குடும்பத்திலும் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மோதல்கள் பற்றி பொதுவெளியில் பேசக் கூட முடியாது. அந்த அளவுக்கு அந்த மோதல்களால் அருவருக்கத்தக்க நிகழ்வுகள் நடந்தன. அதைப்பற்றியெல்லாம் பேசினால் புழுக்கள் நெளியும். தமது முதுகில் இருக்கும் சாக்கடையைத் துடைக்காமல் எங்கள் தலைவர் மீது தயாநிதி மாறன் பாய்வது அவரது இயல்பையும், குணத்தையும் காட்டுகிறது.
2007&ஆம் ஆண்டில் திமுகவின் முதல் குடும்பத்தில் உள்ளவர்களின் அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் தயாநிதி மாறனின் குடும்ப நாளிதழில் ஒரு தரப்புக்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு வெளியிடப் பட்டதையும், அதனால் ஆத்திரம் அடைந்த எதிர்த்தரப்பு மதுரை தினகரன் அலுவலகத்தை தீயிட்டு எரித்ததையும், அதில் அப்பாவி ஊழியர்கள் மூவர் உயிருடன் கருகி இறந்ததையும் தமிழ்நாடு இன்னும் மறந்து விடவில்லை.
மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டதற்கு அடுத்த நாள் தினகரன் நாளிதழின் முதல் பக்கத் தலைப்பு செய்தியில், 'ரவுடி அழகிரி' என்று தலைப்பிட்டு செய்திகள் வெளியிடப்பட்டதை அனைவரும் அறிவர். அதன்பின் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்று, கொஞ்சமும் வெட்கமின்றி, யாரை ரவுடி என்று மாறன் குடும்பம் விமர்சித்ததோ, அவரையே கட்டித் தழுவி, '' இதயம் இனித்தது, கண்கள் பனித்தன'' என்று வசனம் பேசிய வரலாறை எல்லாம் தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மறக்கவில்லை.
திமுகவின் முதல் குடும்ப மோதலைத் தொடர்ந்து கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூடி விவாதித்து தயாநிதி மாறன் அமைச்சரவையிலிருந்தும், திமுகவிலிருந்தும் நீக்கப்பட்டது இன்னும் நினைவிலிருந்து அகல வில்லை. மாறன் குடும்ப நிறுவனங்களில் தங்களுக்குரிய பங்கை முழுதாக தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று அன்றைய முதலமைச்சர் கலைஞர் குற்றஞ்சாட்டியதும், அதன் பின் மாறன் குடும்பத்தை மிரட்டி பெரும் தொகை வசூலிக்கப்பட்டதும் வரலாறு.
அவ்வளவு ஏன்... சில வாரங்களுக்கு முன் தமது மூத்த சகோதரர் தங்களின் குடும்ப சொத்துகளில் தமக்கு உரிய பங்கை தராமல் ஏமாற்றி விட்டார் என்று சொந்த சகோதரனுக்கே வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியது தயாநிதி மாறனுக்கு மறந்து விட்டதா? அதைத் தொடர்ந்து நடந்த திரைமறைவு பேரங்களுக்குப் பிறகு அந்த வழக்கறிஞர் நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது நினைவில்லையா? திமுகவின் முதல் குடும்பத்தில் நடந்த இந்த மோதல்கள் குறித்தெல்லாம் விவாதம் நடத்துவதற்கு தயாநிதி மாறன் தயாராக இருக்கிறாரா?
அரசியலில் விமர்சனங்கள் செய்வதற்கு சில தகுதிகள் வேண்டும். ஆனால், அவற்றின் ஒன்று கூட தயாநிதி மாறனுக்கு இல்லை. தமிழ்நாட்டில் நாகரீகமான, வளர்ச்சி அரசியலை (Decent and Development Politics) செய்ய வேண்டும் என்று எங்கள் தலைவர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதைத் தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். தயாநிதி மாறனுக்கு அவரது பாணியில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் அவரால் தாக்குபிடிக்க முடியாது; அத்தகைய சாக்கடை அரசியலை செய்வதற்கும் எங்களுக்கு விருப்பமில்லை. இதை உணர்ந்து தயாநிதி மாறன் இனியாவது நாவடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன்." இவ்வாறு கே பாலு அறிக்கையில் கூறியுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications