மாம்பழமாம்..மாம்பழம்! டெல்லிக்கே கோரிக்கை வைத்த ராமதாஸ்! அசால்ட்டாய் அன்புமணி சொன்ன பதில்! பரபர பாமக

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது பாமக விவகாரம். கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவின்படி பாமகவின், பெயர், சின்னம், கொடி ஆகியவை தன்னிடம் தான் இருக்கிறது என கூறி வருகிறார் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ். இந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். இதற்கிடையே மாம்பழம் சின்னம் தங்களிடம் தான் உள்ளது, கோர்ட்டுக்கே சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என உறுதியுடன் பேசியுள்ளார் அன்புமணி.

பாட்டாளி மக்கள் கட்சியில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாகக் கடும் மோதல் தந்தை ராமதாஸ் மகன் அன்புமணி இடையே நிலவி வந்தது. கட்சியின் எதிர்காலம் கருதி மகன் அன்புமணியைத் தலைவராக்கிய ராமதாஸ், அவரையே பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார்.

Anbumani Ramadoss PMK Ramadoss

மேலும் கட்சியின் தலைவராக நானே தொடர்வேன் என்றும் அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து ராமதாஸ் அணி, அன்புமணி அணி என பாமகவில் பிளவு ஏற்பட்டது. அதே நேரத்தில் கட்சியின் பொதுக்குழு மூலம் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்குத்தான் அதிகாரம் இருக்கிறது எனக் கூறி அன்புமணி ராமதாஸ் பொதுக்குழுவைக் கூட்டினார்.

பாமக பிளவு

அதில் 2026 வரை அவைத் தலைவராகத் தொடர்வார் எனவும், அனைத்து அதிகாரங்களும் அவருக்குத்தான் இருக்கிறது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நாட்களில் ராமதாஸ் தரப்பும் பொதுக்குழுவைக் கூட்டியது. இரு தரப்புத் தீர்மானங்களும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அன்புமணிதான் பாமகவின் தலைவர், அவருக்குத்தான் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமை இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துக் கடிதம் அனுப்பி இருக்கிறது.

மாம்பழம் சின்ன உரிமை

இந்த நிலையில் தவறான தகவல்களைக் கொடுத்து அன்புமணி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரக் கடிதத்தைப் பெற்றிருப்பதாக ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. அதாவது பீகார் தேர்தலில் போட்டியிடுவதாக கூறித் தான் அன்புமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டு பெற்றதாகவும், தற்போது பீகார் தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார் ராமதாஸ்.

டாக்டர் ராமதாஸ்

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என கட்சியிலும் பொது வெளியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கடிதம் எழுதினாலும், பாமக சின்னமான மாம்பழம் தன்னிடம் தான் இருக்கும் பாமகவினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என பேசி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அன்புமணியின் பேச்சு ராமதாஸ் தரப்பை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

அன்புமணி ராமதாஸ்

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடையே பேசிய அன்புமணி," ராமதாஸ் தரப்பில் சில தீய சக்திகள் இருக்கிறார்கள். அவர்கள் தான் அவரை தவறாக வழி நடத்தி வருகிறார்கள். மாம்பழம் சின்னம் நமக்கு தான் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலுமே எதுவுமே நடக்காது. ராமதாஸுக்காக இதுவரை உண்மையாக உழைத்தேன். இனியும் உண்மையாக உழைப்பேன். பூத் கமிட்டி உள்ளிட்டவற்றை சரி செய்து விட்டால் நாம் தான் ஆளுங்கட்சி. வீடு தோறும் திண்ணை பிரச்சாரத்தில் பாமக ஈடுபட வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் எல்லாம் ஐந்து மாதத்தில் அமைச்சராக போகிறீர்கள்" என உற்சாகப்படுத்தி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+