Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுல சோகம் என்னனா..கூட்டணிக்கு யாரும் வரல! கதவை அடைத்த அறிவாலயம்.. ராமதாஸ் வேண்டாமென்ற விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க, பாமக-தவெக கூட்டணி குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ராமதாஸ் பாமக, திமுக, அதிமுக கூட்டணியில் சிக்கல்களை சந்திக்க, தவெகவுடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், ராமதாஸுடன் பேசவில்லை என்கின்றனர் தவெக நிர்வாகிகள். திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பை சேர்த்துக் கொள்ளக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், விஜயும் கூட்டணி வேண்டாம் என கூறிவிட்டாராம். மேலும் முதல் தேர்தலை தனித்துப் போட்டியிட்டு சந்திக்க விஜய் விரும்புவதாக சொல்கின்றனர்.

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் அதிக பரபரப்பை சந்தித்து வருகிறது. திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தங்களின் கூட்டணி வியூகங்களை உறுதிப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்னும் சில முக்கிய அரசியல் கட்சிகள் எந்தப் பக்கம் செல்லப்போகின்றன என்ற கேள்விக்கு விடை கிடைக்காமாலேயே உள்ளது. குறிப்பாக, ராமதாஸ் பாமக மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், பிரேமலதாவின் தேமுதிக குறித்த பேச்சுகள் அரசியல் வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

Vijay ramadoss Tamil Nadu Assembly Election 2026

ராமதாஸ் பாமக

பாமக தற்போது இரு அணிகளாகப் பிரிந்துள்ள சூழலில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. ஆனால், நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணி எந்த கூட்டணிக்கு செல்லும் என்பது இன்னும் முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்பு இருந்தாலும், அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அந்த வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. "பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது" என்ற திருமாவளவனின் திட்டவட்டமான நிலைப்பாடு, திமுகவின் கூட்டணி கணக்கையே குழப்பியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பாமக தவெக கூட்டணி

இந்த நிலையில், ராமதாஸ் தலைமையிலான பாமக, விஜய் தலைமையிலான தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சுகள் சமீபகாலமாக வலுப்பெற்றன. திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பிலும் ராமதாஸ் செல்ல முடியாத சூழல் உருவாகியதால், புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் தவெக ஒரு மாற்று தேர்வாக பார்க்கப்பட்டது. இதனால், பாமக - தவெக கூட்டணி சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது.

தமிழக வெற்றிக் கழகம்

ஆனால், தற்போது வெளியாகும் தகவல்கள் அந்த எதிர்பார்ப்புக்கு சற்று எதிர்மறையாகவே இருக்கின்றன. தவெக நிர்வாகிகள் தரப்பில், "ராமதாஸுடன் இதுவரை எந்த நேரடி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று கூறப்படுகிறது. பாமகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், "நல்லது நடக்கட்டும்" என்று மட்டும் கூறியுள்ளார்.

விஜய்

மேலும், தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் தேர்தலை தனித்துப் போட்டியிட்டு சந்திக்கவே விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஏற்கனவே, "கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியும்" என்று விஜய் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருத்து, தவெக கூட்டணி அரசியலில் அவசரப்பட விரும்பவில்லை என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. புதிய கட்சியாக மக்கள் ஆதரவு எவ்வளவு உள்ளது என்பதை முதல் தேர்தலிலேயே நேரடியாக சோதிக்க வேண்டும் என்பதே விஜயின் எண்ணமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தேமுதிக, ஓ. பன்னீர்செல்வம்

இன்னொரு பக்கம், தேமுதிக, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறார்கள் என்ற கேள்விக்கும் விடை தெரியாமல் உள்ளது. இதனால், 2026 தேர்தல் களத்தில் பல்வேறு மாற்றங்களுக்கும் கடைசி நேர திருப்பங்களுக்கும் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.மொத்தத்தில், பாமக - தவெக கூட்டணி குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்தாலும், தற்போதைய நிலவரப்படி அதற்கு தெளிவான, உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. விஜய் தனித்து போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கிறார் அதனால், டிடிவி-ஐ கூட சந்திக்கவில்லை என்கின்றனர் தவெகவினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+