Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ் கார்டனுக்கு வந்த பிரபலம்.. ஜெ. வீட்டுக்கு பின்னாடியே.. மொட்டை மாடியில பிரமிப்பு.. யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டதாக, நடிகை நயன்தாரா பூரித்து சொல்கிறார்.. அத்துடன், தனது கனவு அலுவலகம் குறித்தும் மகிழ்ச்சி தகவலை நயன்தாரா பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் என்றாலே சட்டென்று, தமிழக மக்களின் நினைவுக்கு முதலில் வருவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வீடுகள்தான்.. இந்த போயஸ் கார்டனில் "ஜெயலலிதா இல்லம்" என்ற பெயரில் வி.கே. சசிகலாவும் சமீபத்தில்தான் புதிதாக வீடு ஒன்றை கட்டி குடியேறியுள்ளார்.
போயஸ் கார்டன்: அந்த அளவுக்கு பிரபலங்களின் கவனத்தை இந்த போயஸ் கார்டன் ஈர்த்து வருகிறது.. இதற்கு காரணம், சென்னை மாநகரத்தின் மத்தியில் இருந்தாலும், அதிகமான போக்குவரத்து நெரிசல், இரைச்சல்கள் இல்லாமல் இருப்பது இந்த பகுதியின் ஸ்பெஷாலிட்டியாகும். அதனால்தானோ, என்னவோ லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் போய்ஸ் கார்டனிலேயே, தன்னுடைய கனவு இல்லத்தை கட்டியிருக்கிறார்.

Poes Garden Nayanthara says the dream come true momenty and Shares her new office space in chennai

கடந்த 2021ம் ஆண்டிலேயே, போயஸ் கார்டனில் பிரம்மாண்டமான அபார்ட்மென்ட் ஒன்றில், 2 பிளாட் வாங்கினார். ரெண்டுமே 4 படுக்கையறைகள் கொண்டது. இந்த வீடு குறித்து ஏற்கனவே நிறைய செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் வலம்வந்தவாறே இருந்தன..

டிசைன்கள்: அதாவது, அந்த வீட்டின், இண்டீரியர் டிசைன் வேலைகளை செய்ய மும்பையிலிருந்து ஒரு சிறப்பு குழுவினை வரவழைத்ததாகவும், இன்டீரியர் டெகரேஷன் வேலைகள் ஆரம்பமானதாகவும், 16 ஆயிரத்து 500 சதுர அடியில் தயாராகும் வீட்டில், அதிநவீன ஜிம், தியேட்டர், நீச்சல் குளம் போன்ற வசதிகள் பிரம்மாண்டமாக தயாராகி வருவதாகவும் கூறப்பட்டன. ஒரு மாடி மட்டுமே 8,250 சதுர அடி என்ற மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறதாம்..

அதுமட்டுமல்ல, பாத்ரூமின் அளவு மட்டும் 1500 சதுர அடியாம். இந்த இண்டீரியர் வேலைகளுக்காக மட்டும் செய்யப்படும் செலவு மட்டுமே 25 கோடியாம். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் போன்றவர்களின் வீடுகளை வடிவமைத்த மும்பை நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

திருமண பரிசு: இதில் இன்னொரு ஹைலைட்டும் உள்ளது.. இந்த பிரம்மாண்ட வீட்டை விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா திருமண பரிசாக வழங்கியிருக்கிறாராம்.. இந்த கிப்ட் வீடு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு பின்பக்கத்திலேயே இருக்கிறதாம்... ஜெயலலிதாவின் தீவிர ரசிகை என்று நயன்தாரா அடிக்கடி தன்னுடைய பேட்டிகளில் சொல்லி வரும்நிலையில், இப்படி ஒரு பங்களாவை, ஜெ.வின் வீட்டுக்கு பின்புறத்திலேயே வாங்கியிருப்பதாக கூறப்பட்டது, ரசிகர்களிடம் ஆர்வத்தையும் அதிகரித்தது.

திருமணத்துக்கு பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவன், குழந்தைகளுடன் இந்த பங்களாவில் தான் வசித்து வருகிறார்.. இந்நிலையில், காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்து, அலுவலகம் ஒன்றை கட்டி வருகிறார் நயன்தாரா.. போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் மொட்டை மாடியிலேயே இந்த அலுவலகத்தை கட்டி வருகிறாராம்..

புதிய ஆபீஸ்: அடிக்கடி படங்களில் கதை கேட்பதற்காக கணவர் வெளியே செல்வதாலும், குழந்தைகளை பிரிந்து செல்வதாலும், அவர் தனது வீட்டில் புதிய அலுவலகம் கட்டி வருகிறாராம். இது தொடர்பான போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன..

Poes Garden Nayanthara says the dream come true momenty and Shares her new office space in chennai

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாவில்,"எங்கள் கனவு அலுவலகத்தை வடிவமைத்து அதன் உருவாக்கத்திற்கான ஒரு பார்வையின் மந்திர பயணம். நீங்கள் சிறந்தவர், இது உண்மையிலேயே மறக்க முடியாதது மற்றும் இந்த இடத்தை ஒன்றாக உருவாக்கிய மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்" என்று நயன்தாரா நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

சபாஷ்: இந்த அலுவலகத்தைக் கட்டி முடித்ததால் தன்னுடைய கனவு நனவாகியதாகவும், புதிய ஆரம்பம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த கனவு அலுவலகத்தை வெறும் 30 நாட்களில் நனவாக்கிய குழுவினருக்கு எனது நன்றிகள் எனவும் தெரிவித்துள்ள, நயன்தாரா அந்த போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்களும், ரசிகர்களும் நயன்தாராவுக்கு, வாழ்த்துக்களை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+