அண்ணாமலை முன்னிலையில்.. பாஜகவில் இணைந்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை!
சென்னை: தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை முன்னிலையில், கவிஞர் கண்ணதாசனின் மகனும், நடிகருமான அண்ணாதுரை கண்ணதாசன் பாஜகவில் இணைந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக பாஜக கட்சியை வலுப்படுத்தும் பணிகளிலும் கணிசமான தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெறுவதிலும் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக வலுவாக இருக்கும் இடங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். இது ஒருபக்கம் இருக்க கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் பாஜக உறுப்பினர் சேர்க்கையிலும் தீவிரம் காட்டி வருகிறது.

மாற்றுகட்சியில் இருந்து வருபவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோரையும் பாஜக கட்சியில் இணைத்து வருகிறது. அண்மையில் கூட அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். இதுகுறித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவர் கரத்தினை வலுப்படுத்த, தேசிய பொதுச் செயலாளர் முன்னிலையில் நமது கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன்-ஐ வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அவரின் அரசியல் அனுபவமும், தொடர்ந்த மக்கள் பணியும், தமிழக பாஜகவிற்கு மேலும் ஊக்கமளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறியிருந்தார். பாஜக தொடர்ந்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், மறைந்த கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை பாஜகவில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் அண்ணாதுரை இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற அண்ணாமலை கட்சியின் அடையாள அட்டையையும் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியை சேர்ந்த கவிஞர் கண்ணதாசனின் இரண்டாவது மனைவி பார்வதி ஆவார். கண்ணதாசன் - பார்வதி தம்பதிக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்ள் என மொத்தம் 7 பிள்ளைகள்..இதில் அண்ணாதுரை கண்ணதாசன் தான் இன்று தமிழக பாஜகவில் இணைந்துள்ளார்.
கண்ணதாசனை பொறுத்தவரை மிகப்பெரும் கவிஞராக விளங்கினார். அரசியலிலும் ஈடுபாடு காட்டிய கண்ணதாசன், துவக்கத்தில் திமுகவில் இருந்தார். அண்ணாவுடனான கருத்து வேறுபாட்டால் திமுகவில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி, காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு நேர் எதிர் கொள்கை கொண்ட பாஜகவில் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை தற்போது இணைந்துள்ளார்.
-
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
ஓரம்கட்டப்படும் நயினார்.. தமிழக பாஜக தலைவர் ரேஸில் முந்தும் ராம சீனிவாசன்? அடுத்தது என்ன? -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன?












Click it and Unblock the Notifications