"அழகான சந்திப்பு, கலைஞரின் இழப்பிலிருந்து மெல்ல மீட்டெடுக்கிறீர்கள்.."- முதல்வருக்கு வைரமுத்து நன்றி
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு "வைரமுத்து இலக்கியம் - 50" என்ற லோகோவை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்
கவிஞர் வைரமுத்து தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு அடுத்தபடியாக பெரும்பாலான ரசிகர்களால் தமிழ் திரையுலகில் கொண்டாடப்படுகிறார். மண் மணம் மாறாத கவிகளுக்குச் சொந்தக்காரார். இது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் கவிஞராக அறிமுகம் ஆனார்.
ரஜினி , அஜீத், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஓப்பனிங்க் பாடல்களையும் எழுதி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவர். பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களிடமும், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி வருகிறார்.

இலக்கிய உலகில் 50 ஆண்டுகள்
45 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்தாலும், இலக்கிய உலகிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப்போர் போன்ற நாவல்களும், கவிதைத் தொகுப்புகளும் இன்று வரை இலக்கிய உலகிலும், விற்பனையிலும் தனி இடத்தை பெற்றுள்ளன. முத்து இலக்கிய உலகில் நுழைந்து 50 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.

வைரமுத்துவுக்கு வாழ்த்துகள்
இதையடுத்து ரசிகர்கள் பலரும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற கவிஞர் வைரமுத்து எனவும் புகழ்ந்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து இலக்கியம் 50 என்ற பெயரில் சமூக வலைதளங்களிலும் பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதள்வர் ஸ்டாலின்
இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் பயணத்தை பாராட்டி முதல்வர் ஸ்டாலின், "வைரமுத்து இலக்கியம் - 50" வெளியிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழோடு புதுமையையும் அறிவியலையும் சேர்த்து, சிறந்து விளங்கும் கவிதைகளை- திரைப்படப் பாடல்களை தேனருவியெனக் கொட்டி, தமிழால் நம்மை நனைக்கும் கவிப்பேரரசு @Vairamuthu அவர்களது எழுத்துப் பணியின் பொன்விழா இலச்சினையை வெளியிட்டேன். தன் தமிழால் கவிப்பேரரசு நூறாண்டு கடந்தும் நம்மை ஆளட்டும்!" என பதிவிட்டு்ள்ளார்.

வைரமுத்து நன்றி
இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ள வைரமுத்து, "அழகான சந்திப்பு அன்பான உரையாடல் பாசாங்கில்லாத புன்னகை பாசத்தின் உடல்மொழி கலைஞரின் இழப்பிலிருந்து என்னை மெல்ல மெல்ல மீட்டெடுக்கிறீர்கள் வைரமுத்து இலக்கியம் 50 இலட்சினையை வெளியிட்டதற்கு மனம்குளிர்ந்து நன்றி சொல்கிறேன் மாண்புமிகு முதல்வர் அவர்களே." என பதிவிட்டுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications