“போர் வேண்டாம்.. புன்னகை வேண்டும்”.. இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் குறித்து கவிஞர் வைரமுத்து வேதனை!
சென்னை: இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன.

இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஈரான் கட்டமைப்புகள் மீது புதிய வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு தெஹ்ரான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து தனது எக்ஸ் தள பதிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில்,
"இதோ
இன்னுமொரு யுத்தம்
தாங்குமா?
மண்டை உடைந்துவிடும்
மண்ணுருண்டை
இஸ்ரேல் காஸா
சாவுச் சத்தம் அடங்குவதற்குள்
ரஷ்யா உக்ரைன்
ரத்தச் சகதி காய்வதற்குள்
இஸ்ரேல் ஈரான்
தொடங்கிவிட்டது
சொல் பேச்சுக் கேட்காத
இரு நாடுகளால்
உலகத்தைச் சூழ்ந்திருக்கின்றன
அச்சத்தின் கடலலைகள்
அப்பாவி மனித எலும்புகளை
நொறுக்கித் தின்னுகின்றன
ஆயுதப் பற்கள்
போர்ச் சங்கிலி என்பது
உலகைப் பிணைத்திருக்கிறது
இஸ்ரேல் யுத்தம்
மதுரை மல்லிகையில் புகையடிக்கிறது
ஈரான் யுத்தம்
ஈரோட்டின் மஞ்சளைக்
கரியாக்குகிறது
மில்லி மீட்டர்களில்
ஏறும் பொருளாதாரம்
மீட்டர் மீட்டராய்ச் சரிகிறது
அணு ஆயுதங்களை
மொத்தத்தில் அழிப்பதற்கு
உலக நாடுகள் ஒரே மையில்
கையொப்பமிடவேண்டும்
போர் வேண்டாம்
புன்னகை வேண்டும்
யுத்தமில்லாத பூமி - ஒரு
சத்தமில்லாமல் வேண்டும்"
இவ்வாறு பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் இஸ்ரேல்! எதிர்ப்பது ஏன்? பின்னணி -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications