கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு கவித்துவமாக பிறந்த நாள் வாழ்த்து சொன்ன வைரமுத்து
சென்னை: கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு தனக்கே உரித்தான கவிதை பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார், கவிஞர் வைரமுத்து.
ஈரோடு தமிழன்பன் பன்முக திறமை கொண்ட கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முக திறமை மற்றும் ஆளுமைகளைக் கொண்டிருப்பவர்.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். இதுபோலவே, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை என்ற ஊர்தான் இவரது பூர்வீகம். தமிழன்பன் இயற்பெயர் ந.ஜெகதீசன் ஆகும்.

சிலிர்ப்புகள்
தோணி வருகிறது(முதல் கவிதை)
விடியல் விழுதுகள்
தீவுகள்கரையேறுகின்றன
நிலா வரும் நேரம்
சூரியப் பிறை
ஊமை வெயில்
திரும்பி வந்த தேர்வலம்
நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
காலத்திற்கு ஒருநாள் முந்தி
ஒருவண்டிசென்ரியு
வணக்கம் வள்ளுவ
தமிழன்பன் கவிதைகள்(தமிழக அரசு பரிசு)
பொதுவுடைமைப் பூபாளம்
மின்மினிக் காடுகள்
சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
போன்றவை தமிழன்பன் எழுதிய நூல்களாகும்.
புதுக்கவிதைகளில் புகழ் பெற்ற ஈரோடு தமிழன்பனுக்கு பிறந்த நாள் வாழ்த்தை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.
தமிழன்பரே!
எட்டுத் திசையும் எட்டும்
உமது எண்பத்தெட்டு
தொப்பூழ் மரபியல்
சுண்டிய முருகியல்
சோசலிசச் சூடு
சொட்டும் தேன்பாகு
உமது கவிதை
நதிகள்மீது
பொறாமையுறாத
கடல் நீ
'வணக்கம் வள்ளுவ'
நீ சொன்னது
'வணக்கம் தமிழன்ப'
யாம் சொல்வது
கவியரங்கேறுவோமா?
நாமிருக்கிறோம்;
கலைஞரில்லையே!
இவ்வாறு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சக கவிஞருக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்ததை பலரும் பாராட்டியதை பின்னூட்டத்தில் பார்க்க முடிகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications