சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை.. மாணவிகளுக்கு மூளைச்சலவை.. பெண் பக்தர் சுஷ்மிதாவை தூக்கிய போலீசார்!
சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு உடைந்தையாக இருந்த பெண் பக்தர் சுஷ்மிதாவை போலீசார் கைது செய்தனர். சுஷ்மிதா மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து வந்துள்ளார்.
Recommended Video
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா டபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமானது.
சுஷில் ஹரி பள்ளி மாணவிகள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதால் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிரடி கைது
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசார், டேராடூனில் தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை பிடிக்க விரைந்தனர். ஆனால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவசங்கர் பாபா அங்கு இருந்து தப்பினார். ஆனால் தலைநகர் டெல்லியில் வைத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தீவிர விசாரணை
பின்னர் அவரை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். மேலும் அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடந்தினார்கள். சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள். இதற்கிடையே சிவசங்கர் பாபாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் முதலில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண் பக்தை கைது
பின்னர் அவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவசங்கர் பாபாவை 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவுக்கு உடைந்தையாக இருந்த அவரின் பெண் பக்தர் சுஷ்மிதாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மாணவிகளுக்கு மூளைச்சலவை
பெண் பக்தர் சுஷ்மிதா, சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளியின் முன்னாள் மாணவி என்றும் கூறப்படுகிறது. சிவசங்கர் பாபாவின் பாலியல் அத்துமீறல்களுக்கு எல்லாம் உடைந்தையாக இருந்துள்ளார் சுஷ்மிதா. பள்ளி மாணவிகளை மூளைச் சலவை செய்து சிவசங்கர் பாபாவிடம் அழைத்து வருவதுதான் சுஷ்மிதாவின் மெயின் வேலையாக இருந்ததாக கூறப்படுறது. சுஷ்மிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications