ஆடிய ஆட்டம் என்ன.. ஆபாச குவியல்.. யூ டியூபர் இன்பாவை கம்பி எண்ண வைத்த போலீஸ்.. இரவோடு இரவாக கைது!
சென்னை: சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வந்த இன்பா (எ) இன்பநிதி (24) கைது செய்யப்பட்டு உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் இன்பா. அறந்தாங்கி அருகே வாழ்ந்து வரும் இன்பா இன்பா டிராக் என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரின் சேனல் கடந்த சில மாதங்களாகவே டிரெண்டிங். அதற்கு காரணம் இவர் போடும் ப்ரீயட்ஸ் வீடியோக்கள்.

ஆம் பெண்களின் ப்ரீயட்ஸ் குறித்து இவர் அடிக்கடி வீடியோ போடுவார். இவர் வெளியிடும் வீடியோக்களில் ஆபாசம் கொட்டி கிடக்கும். பெண்களின் ப்ரீயட்ஸ் போது.. தான் எப்படி அவர்களை நடத்துவேன்.. எப்படி அவர்களை தாங்குவேன் என்று வீடியோ போடுவதே வழக்கம்.
கொடுமை: ஆனால் அதோடு நிறுத்தாமல்.. அடிக்கடி காமம் பற்றி பேசுவது. உடல் உறவு பற்றி பேசுவது.. அதை மெஜூரிட்டி இல்லாமல்.. குழந்தை தனமாக பேசுவது என்று கடுப்பேற்றுவதுதான் இன்பாவின் வழக்கம். திருக்குறளில் இருக்கும் அறத்துப்பால்,பொருட்பால் எல்லாம் விட்டுவிட்டு.. இன்பத்து பால் பற்றி மட்டுமே பேசுவது இன்பாவின் வழக்கம்.
நடமாடும் க்ரிஞ்ச் குடோன்.. காம குவியல் என்றுதான் இவரின் சேனலை சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மோசமான வீடியோக்கள். ஆனால் அதையும் பார்க்க ஆள் உள்ளதால்தான் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் ட்விட்டரில் போட்ட வீடியோதான் சர்ச்சையானது.
சர்ச்சை: இவர் பொதுவாக இன்ஸ்டாகிராமில், பேஸ்புக்கில் போஸ்ட் போடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் ட்விட்டருக்கும் வந்தவர் அங்கும் போஸ்ட்டுகளை போட தொடங்கினார். அதில் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில்தான் சர்ச்சை ஏற்பட்டது. அதில் அதிகமான ஆபாச வசனங்கள் இருந்தது. அதை தாண்டி குழந்தைகளை பாலியல் தேவைக்கு பயன்படுத்துவது பற்றியும் இருந்தது.
வழக்கு பதிவு: அதில் டீச்சர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் இடையில் உள்ள காதல் பற்றி போஸ்ட் செய்து இருந்தார். மோனோ ஆக்டிங் முறையில்.. ஆடியோ எதுவும் இல்லாமல் சப் டைட்டில் மட்டும் வைத்து.. முகத்தில் ரியாக்சன் மட்டும் கொடுத்து வீடியோ வெளியிடுவதே இவரின் ஸ்டைல்.
அதிகமான ஆபாச வசனங்கள் கொண்ட சப் டைட்டில் வைத்து ஆபாசத்தின் உச்சமாக இவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் கொடுத்தார். அதேபோல் நெட்டிசன்கள் பலரும் இவருக்கு எதிராக புகார் வைத்தனர்.
நெட்டிசன்கள் கடுப்பு: சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் இருந்த ஆபாச வசனங்கள், காட்சிகளை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பின் உச்சிக்கே போனார்கள். இது சோசியல் மீடியாவில் கோபமாக பகிர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் இன்பாவோ வீடியோவை டெலிட் செய்தார். அதோடு நிற்காமல் திமிராக.. ட்விட்டர் என்றால் பெரிய இதுவா.. என்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. என் கேரக்டர் உங்களுக்கு தெரியாது. இனி தெரியும் என்று கூறுவார்.
அவரின் அந்த பேச்சு கடும் சர்ச்சையானது. இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் புகார் கொடுத்தார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் இன்பாவை நேற்று இரவு கைது செய்தனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications