சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இளைஞர்களிடம் ஆபாச பேச்சு.. பெண் வேடத்தில் பேசி தர்ம அடி வாங்கிய இளைஞர்!

பர்தா அணிந்து ஆபாசமாக பேசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

சென்னை: பர்தா அணிந்த பெண் இவ்வளவு ஆபாசமாக பேசுவாரா? என்று எல்லோருமே ஷாக் ஆகி நின்றார்கள்.

வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் மார்க்கெட் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்தது. கருப்பு நிற பர்தா அணிந்த பெண் அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அங்கே சில இளைஞர்கள் ரோட்டோரம் நின்று கொண்டிருந்தார்கள். இந்த பெண் நேராக அந்த இளைஞர்கள் அருகில் சென்று நின்றார்.

ஆபாசமாக பேசினார்

ஆபாசமாக பேசினார்

அவர்களுக்கு இது யாரென்றும் தெரியாது, எதற்காக இவ்வளவு பக்கத்தில் வந்து நிற்கிறார் என்றும் புரியாமல் விழித்தார்கள். மெதுவாக பர்தா அணிந்த பெண்ணே இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தார். சாதாரணமாக பேசியிருந்தால்கூட பரவாயில்லையே... அசிங்க அசிங்கமாக பேச ஆரம்பித்தார். அருவருப்பான கேள்விகளை கேட்டதும் அந்த இளைஞர்களுக்கு எதுவுமே புரியவில்லை.

வேளச்சேரி போலீசார்

வேளச்சேரி போலீசார்

ஆனால் குரலில் மட்டும் ஏதோ மாற்றம் இருப்பதை தெரிந்ததும், டக்கென பர்தாவை விலக்கி பார்த்தனர். அப்போதுதான் அது, பெண் அல்ல, ஒரு இளைஞர் என தெரிந்தது. இதனால் ஆத்திரம் அதிகமான இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த வாலிபரை அடித்து உதைத்தார்கள். இந்த தகவலறிந்து வேளச்சேரி போலீசாரும் வந்துவிட்டார்கள்.

சிகிச்சை

சிகிச்சை

அதற்குள் அந்நபருக்கு உடம்பெல்லாம் ரத்தம் வழிந்து காயம் ஏற்பட்டது. எனவே அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார்கள். பின்னர் என்ன விவரம் என்று விசாரித்தார்கள். அப்போது அந்த நபர் சொன்னதாவது:

வெப்சைட் நிகழ்ச்சி

வெப்சைட் நிகழ்ச்சி

"என் பெயர் சங்கர். சொந்த ஊர் சேலம். கோடம்பாக்கத்தில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் என்ஜினியர். வெப்சைட் ஒன்றில் ப்ரோக்ராம் நடத்துகிறோம். அதன்படி, நான் பர்தா அணிந்து கொண்டு ஆண்களிடம் பேச வேண்டும். அப்போது அந்த ஆண்கள் என்னை ஆண் என கண்டுபிடித்துவிட்டால், அவர்களுக்கு பரிசு வழங்குவோம். என்னை பெண்ணாக நினைத்து அவர்கள் ஏமாந்துவிட்டால் எனக்கு பரிசு தருவதாக சொன்னார்கள்" என்றார்.

காமிராமேன் இல்லை

காமிராமேன் இல்லை

ஆனால் அந்த இளைஞர் சொன்னதுபோல், அது ஒரு நிகழ்ச்சி போலவே தெரியவில்லை. அவருடன் வேறு யாருமே வரவில்லை, காமிராமேனும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்பவர் என ஒருவருமே இல்லாததால், இளைஞரின் பேச்சை போலீசாரால் நம்ப முடியவில்லை. அதனால் இன்னும் விசாரணை போய் கொண்டு இருக்கிறது.

English summary
Police arrested young man wearing Purdah near Velacherry. He told police that he was wearing burda for a Website show
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X