நள்ளிரவு வரை நீண்ட விசாரணை.. காவல் நிலையத்தில் நடந்தது என்ன? சீமான் பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த நாம் தமிழர் சீமான், சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாகச் சீமானிடம் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு வெளியே வந்த சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Seeman NTK

சீமான் பேச்சு

அப்போது பேசிய சீமான், "என்னிடம் முன்பு கேட்ட அதே கேள்விகளைத் தான், மீண்டும் கேட்டனர்.. புதிதாக எந்தவொரு கேள்விகளையும் கேட்கவில்லை; நான் தேவையான விளக்கம் அளித்தேன்.. தேவை என்றால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றார்கள். நானும் சரி எனச் சொல்லிவிட்டேன்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்துவிட்டார்கள். ஆனாலும், இது தொல்லையாக இருக்கிறது என நான் தான் வழக்குப் போட்டேன். நீதிபதி விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் 3 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில், 3 நாளில் விசாரணை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? முதலில் ஒரு சம்மனை கொடுத்தார்கள். அப்போது கட்சி ரீதியாகப் பயணம் இருப்பதாகச் சொல்லியிருந்தேன்.

அசிங்கப்படுத்த முயல்கிறார்கள்

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். அது விசாரணைக்கு விரைவில் வரும் நிலையில், விசாரணையை அவசரமாக்கியுள்ளனர். என்னை அசிங்கப்படுத்தும் நோக்கில் போலீசார் செயல்படுகிறார்கள்.. அசிங்கப்படுத்தினால் ஓடிவிடுவோம் என நினைக்கிறார்கள்.. இதில் வேறு எதுவும் இல்லை.

வீட்டில் யாரும் இல்லை என்பதால் அழைப்பாணையை ஒட்டியதாகச் சொல்கிறார்கள். அப்போ கைது செய்தவர்கள் எல்லாம் எங்கே இருந்தனர். எனது மனைவி கூட உள்ளே தான் இருந்தார். மேலும், அழைப்பாணையை ஒட்டுவதுடன் உங்கள் வேலை முடிந்தது. ஒட்டும் போது தடுத்தால் மட்டுமே பணி செய்ய விடாமல் தடுத்தாக குற்றம். ஒட்டிய பிறகு அதை வைத்து பூஜையா செய்ய முடியும். அழைப்பாணை பார்த்துவிட்டோம் கிழிக்கிறோம். அதைக் கிழிக்கக்கூடாது என்று சட்டம் எதாவது இருக்கிறதா.

சம்மன் விவகாரம்

அதே கதையைத் தான் இப்போதும் கேட்டார்கள். தயாரிப்பாளரிடம் கதை சொல்வது போல நான் மீண்டும் சொல்லி வந்தேன். புதிய ஆய்வாளர் என்பதால் மீண்டும் பதிவு செய்து கொண்டனர். என்னிடம் விசாரணையை நல்ல முறையிலேயே நடந்து கொண்டனர். அதேநேரம் கைது செய்த எனது உதவியாளரை போலீசார் இரும்பு கம்பியைக் கொண்டு அடித்துள்ளனர். இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்போம். சம்மனை ஒட்டியது வளசரவாக்கம் போலீஸ், அப்போது நீலாங்கரை போலீஸ் எதற்காக வீட்டிற்கு வர வேண்டும். சம்மனை

சம்மனை கிழிப்பது குற்றம் இல்லை

என்னை 8 மணிக்கு விசாரணைக்கு வரச் சொன்னார்கள். பிறகு 10 நிமிடம்.. 10 நிமிடம் என போலீசார் தான் தாமதப்படுத்தினர்.. முதல்வர் நிகழ்ச்சியாகவே என்னைத் தாமதப்படுத்தியுள்ளனர். காவல் துறைக்கு அரசு தரப்பில் இருந்து அழுத்தம் இருக்கிறது.. நானும் சரி, எனது மனைவியும் சரி மன உறுதி கொண்டவர்கள். ஆனால், என்னைப் பின்பற்றும் சின்ன பிள்ளைகள் தங்கள் மன வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். அது வெறியாகிறது.

முதல்வராக்கப் போகிறார்கள்

கருணாநிதி என்னைக் கைது செய்து கைது செய்து தலைவராக மாற்றினார்.. தற்போது மீண்டும் கைது செய்து கைது செய்து என்னை முதல்வராக்கப் போகிறார்கள்.. இது எனது வளர்ச்சிக்குக் காரணமாக இருக்குமா என்றால் தெரியாது.. ஆனால், இது எனக்கு இடையூறாக இருக்கப் போவது இல்லை. எந்தவொரு அடையாளமும் இல்லாமல் மக்கள் எங்களுக்கு வாக்குகளை அளித்து அங்கீகாரம் கொடுத்துள்ளனர். இந்த வழக்கு ஒருபோதும் எனக்குப் பின்னடைவை ஏற்படுத்தாது

10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்த வரை அந்த அம்மா வரவே இல்லை. 2021 தேர்தல் சமயத்தில், 2024 லோக்சபா தேர்தல் சமயத்தில் வந்தார்கள்.. வழக்கு முடியவில்லை என்றால் 2026ல் மீண்டும் அவர் பேசலாம்" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+