"உன் அம்மாவை கொன்னுடுவேன்”.. வளர்ப்பு மகளுக்கு 5 ஆண்டுகளாக நடந்த பாலியல் கொடுமை.. தலைமை காவலர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாயைக் கொன்றுவிடுவேன் என மிரட்டி 5 ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 21 வயது பெண் அளித்த புகாரில் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். தாயை 2வது திருமணம் செய்த காவலர், 17 வயது முதல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் தாயின் இரண்டாவது கணவரான தலைமை காவலர் ஒருவர், தனது வளர்ப்பு மகளையே கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக எழுந்துள்ள புகார் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Police Constable Arrested Over Alleged 5-Year Sexual Assault of 21-Year-Old Woman

சென்னையில் 21 வயது இளம்பெண் ஒருவர், தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக இன்று பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது தாயாரை 2-வது திருமணம் செய்து கொண்ட தலைமை காவலர் வேல்முருகன், தனக்கு 17 வயது இருக்கும் போதிலிருந்தே கடந்த 5 வருடமாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கொடூரம் குறித்து வெளியில் சொன்னால், பெண்ணின் தாயைக் கொலை செய்து விடுவதாக தலைமை காவலர் வேல்முருகன் மிரட்டியுள்ளார். இதனால் உயிருக்கு பயந்து, இத்தனை ஆண்டுகளாக யாரிடமும் கூறாமல் உண்மையை மறைத்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு இளைஞரைக் காதலிப்பதாக அந்த பெண் வீட்டில் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமைக் காவலர், அந்த பெண்ணைக் கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்தே, பொறுமையிழந்த அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண்ணின் இந்த புகாரைத் தொடர்ந்து, பெரவள்ளூர் போலீசார் சம்பந்தப்பட்ட தலைமை காவலர் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய தலைமை காவலர் ஒருவரே, தனது வளர்ப்பு மகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+