திடீரென நின்ற இதயம்.. விஜய்யின் சுதந்திர தின விழாவில் மயங்கிய காவலர் சிகிச்சை பலனின்றி பலி.. சோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவிற்காக இசை வாத்தியம் வாசிக்க வந்த தூத்துக்குடியை சேர்ந்த காவலர் நாயக் தர்மராஜ் திடீரென்று மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில ்தான் அவரது பின்னணி குறித்த சோக தகவல் வெளியாகி உள்ளது.

police-constable-dies-after-he-fainted-during-cm-vijays-independence-day-flag-hoisting-ceremony-in

நாடு முழுவதும் இன்று 80வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தமிழகத்தின் முதல்வராக முதல் முறையாக விஜய் இன்று தேசியக்கொடியை ஏற்றினார்.

சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு முதல்வர் விஜய் மாநில மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.

இந்த விழாவில் முதல்வர் விஜய்க்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை, போலீஸ் இசை வாத்திய குழுக்களின் மரியாதை வழங்கப்பட்டது. இந்த விழாவிற்காக இசை வாத்தியம் வாசிக்க வந்த காவலர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர் அவரை மயக்கத்தில் இருந்து மீட்க முயன்றனர்.

ஆனால் அது நடக்கவில்லை. இதையடுத்து போலீசார் அவரை தூக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். ஆம்புலன்ஸில் இருந்த செவிலியர் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தார். ஆனால் அதுவும் கைக்கொடுக்கவில்லை. இதையடுத்து உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

.மருத்துவமனையில் காவலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக அவர் இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தது தெரியவந்தது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இரவில் இறந்தார். இறந்த காவலரின் பெயர் நாயக் தர்மராஜ். இவர் தூத்துக்குடி மாவட்டதை சேர்ந்தவர்.

தற்போது அவரது உடல் ஆவடி சிறப்பு காவல் படையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளைஅவரது உடல் தூத்துக்குடி மாவட்டத்துக்கு எடுத்து சென்று இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளது. முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தின கொடியேற்றும் விழாவில் காவலர் ஒருவர் இதயம் செயலிழந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+