பூவை நீ பூ மடல்... பூவுடல் தேன் கடல்.. போலீஸ் ஜோடியின் டிக் டாக் வீடியோவால் சலசலப்பு!
போலீஸ் ஜோடி ஒன்று பாடி நடித்த வீடியோ டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.
Recommended Video

சென்னை: "பூவை நீ பூமடல்.. பூவுடல் தேன் கடல்.. தேன் கடலில் தினமும் குளித்தால் மகிழ்வேன்" என்று ஆண்-பெண் போலீஸ் ஜோடி ஒன்று யூனிபார்முடன் ஆடி, பாடிய வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொஞ்ச நாளாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. பெண்கள் உட்பட எல்லா இளைஞர்களும் அதிகமாகவே பயன்படுத்தி வருகிறார்கள்.
கலைதாகம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள் என்பதால் இதனுடைய பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது.

காக்கி சட்டை
இந்த ஆப்பில்தான் ஆண்-பெண் போலீஸ் ஜோடி ஒன்று பாட்டு பாடி வாயசைத்து நடித்துள்ளனர். அந்த வீடியோவில், இருவருமே காக்கி யூனிபார்மில் உள்ளனர். அது ஒரு பொது இடம்போல் உள்ளது. இவர்களுக்கு பக்கத்தில் நிறைய ஒருசிலர் நடந்து போய் கொண்டிருக்கிறார்கள்.

காதல் மகாராணி
ஆண் போலீஸ் "காதல் மகாராணி" என்ற பாடலை வாயசைத்து கமல் போலவே நடிக்கிறார். அருகில் பெண் போலீஸ் ஹீரோயின் போலவே முகபாவனைகளை தருகிறார். இந்த வீடியோவிற்கு பலவித விமர்சனங்கள் எழுந்துள்ளன. "காக்கி சட்டையில் டூயட்", "நைட்டில் ரொமான்ஸ் பாடி டூயட் ஜோடி லூட்டி" என்றெல்லாம் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

தற்கொலை
ஆனால் இந்த வீடியோவை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. உரிய விடுமுறை கிடைக்காமல், நிறைய மன உளைச்சலில் தற்போது எண்ணற்ற போலீசார் பணியாற்றி வருகிறார்கள். பலரை அது தற்கொலை வரை சென்று விட்டுவிடுகிறது. தமிழக அரசும் போலீசாரின் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சியையும் ஊக்குவித்து வருகிறது.

பாராட்டத்தக்கதே
இந்நிலையில் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட தாங்களே இதுபோன்றதொரு யுக்தியை கையாளுவது சிறப்பு வாய்ந்ததே. கலையை ரசிக்க எந்த தடையும் யாருக்கும் எப்போதும் கிடையாது. அதே சமயத்தில் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் எண்ணற்ற போலீசாருக்கு இந்த அதிகாரியின் டிக்-டாக் வீடியோக்கள் புதிய உத்வேகத்தைதான் தருவதாக இருக்கும்! அந்த வகையில் இது பாராட்டக்கூடியதாகவே இருக்கிறது!!












Click it and Unblock the Notifications