லாக்கப் டெத் to துப்பாக்கிச்சூடு! சட்டம் ஒழுங்கில் இனி RTIல் கேட்க முடியாத கேள்விகள்! விஜய் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. இனி ஆர்டிஐ மூலம் சட்ட ஒழுங்கு தொடர்பாக என்ன மாதிரியான கேள்விகளை எழுப்ப முடியாது என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரிவு என்பது வெறும் பொது நிர்வாகப் பிரிவு மட்டுமல்ல.. பொதுமக்களின் உயிர், வாழ்வுரிமை மற்றும் காவல் துறை அத்துமீறல்கள் தொடர்பான மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடமாகும்.

RTI Act Tamil Nadu

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக விஜய் அரசு எடுத்துள்ள புதிய முடிவு அரசியல் களத்திலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் பொதுத் துறையின் கீழ் இயங்கும் மிக முக்கியமான பிரிவான பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு RTI சட்டத்தில் இருந்து முழு விலக்கு அளித்து அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கடுமையான முடிவின்படி, சட்டம் ஒழுங்கு, காவல் துறை நிர்வாகம் மற்றும் மாநில பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கியமான விவரங்களை பொதுமக்கள் இனி RTI சட்டம் மூலம் கேட்டுப் பெற முடியாது. வெளிப்படைத்தன்மையைக் காக்கும் ஒரு சட்டத்தில் இப்படி ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இனி ஆர்டிஐ மூலம் சட்ட ஒழுங்கு தொடர்பாக என்ன மாதிரியான கேள்விகளை எழுப்ப முடியாது என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. '

இனி RTI மூலம் பெற முடியாத முக்கிய தகவல்கள்:

அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான அம்சங்கள் இதோ:

1. போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் என்கவுண்டர் விசாரணை அறிக்கைகள்

காவல்துறை பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும்போது அல்லது என்கவுண்டர் நடக்கும்போது, அது குறித்து நீதித்துறை அல்லது கோட்டாட்சியர் விசாரணை நடத்தப்படுவது வழக்கம் (PSO 150(3) கீழ் வரும் அறிக்கைகள்).

யார் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது?
காவல் துறை செய்தது சரியா, தவறா?
அந்த விசாரணையின் முடிவுகள் என்ன?

இனி இந்த விசாரணை அறிக்கைகளை ஒரு சாமானியனோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ RTI மூலம் கேட்டுப் பெற முடியாது.

2. லாக்கப் மரணங்கள் மற்றும் சித்திரவதைகள்

காவல் நிலையத்தில் அல்லது நீதிமன்றக் காவலில் இருக்கும்போது கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்தாலோ (PSO 151 கீழ் வரும் ஆய்வுகள்), போலீஸ் சித்திரவதைக்கு உள்ளானாலோ, அது குறித்த விரிவான விசாரணை அறிக்கைகள் இந்த சட்டம் ஒழுங்கு பிரிவுக்குத்தான் வரும்.

லாக்கப்பில் அடித்துக் கொல்லப்பட்டாரா?
அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதா?
தவறு செய்த அதிகாரிகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
போன்ற கேள்விகளுக்கு இனி அரசு RTI மூலம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்காது.

3. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) மற்றும் குண்டாஸ் வழக்குகள்

எந்தக் காரணமும் இன்றி அரசியல் பழிவாங்கலுக்காகவோ அல்லது தனிப்பட்ட பகையினாலோ ஒருவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) அல்லது COFEPOSA பாய்கிறதா, சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சார்பாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் குறித்த அரசின் நிலைப்பாடு என்ன என்பதை இனி வெளிப்படையாக அறிய முடியாது.

4. சாதி மற்றும் மத மோதல்கள் தொடர்பான ரகசிய முடிவுகள்

மாநிலத்தில் நடக்கும் சாதி, மதக் கலவரங்கள், அவற்றைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட விசாரணை ஆணையங்கள் அளித்த பரிந்துரைகள் மற்றும் அந்தப் பரிந்துரைகள் மீது அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள் இனி பொதுமக்கள் பார்வைக்கு வராது.

5. மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்களின் போராட்டங்கள்

மாணவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள், அவற்றின் பின்னணி மற்றும் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வது (Withdrawal of cases) தொடர்பான அரசின் உள் முடிவுகள் ரகசியமாக வைக்கப்படும்.

6. மனித உரிமை ஆணையக் கடிதங்கள்

தேசிய மனித உரிமை ஆணையம் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்து அரசுக்கு அனுப்பும் நோட்டீஸ்கள் மற்றும் அதற்கு அரசு அனுப்பும் பதில்கள் இந்த விதிகளின் கீழ் RTI வரம்பில் வராமல் முடக்கப்படும் அபாயம் உள்ளது.

சாமானியனுக்கு ஏன் இந்த உத்தரவு பெரும் பாதிப்பு?

இதுவரை ஒரு ஏழைக்கோ நலிந்தவருக்கோ காவல்துறையினரால் அநீதி இழைக்கப்பட்டால், "என் மகன் எப்படி இறந்தான்?", "விசாரணை அறிக்கை என்ன சொல்கிறது?" என்று கேட்டுப் பெற RTI மட்டுமே ஒரே சட்டப்பூர்வ வழியாக இருந்தது.

இப்போது இந்த முக்கியமான கோப்புகளை "உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு" என்ற பெயருக்குள் மறைத்துவிட்டதால், காவல் துறை செய்யும் தவறுகளுக்கு நீதி கேட்பது சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும். ஒருபுறம் அமைதியைக் காக்க ரகசியம் தேவை என்று அரசு கூறினாலும், மறுபுறம் மனித உரிமை மீறல்களும், அதிகார அத்துமீறல்களும் பொதுமக்களின் கண்களுக்குத் தெரியாமலேயே மூடி மறைக்கப்படும் நிலையை இது உருவாக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+