"கெட்டு போன உணவிற்கு" கான்டாக்ட் சர்ட்டிபிகேட்! Irfan's view சேனலின் ஓனர் இர்பான் மீது வழக்கா?
சென்னை: பணத்திற்காகவும் புகழுக்காகவும் ரிவ்யூ என்ற பெயரில் உயிருக்கே உலை வைக்கும் ஹோட்டல்களை புகழ்ந்து வீடியோ வெளியிடும் இர்பான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Recommended Video
பொதுவாக பசிக்கு உணவு கொடுப்போரை தெய்வத்திற்கு சமமாக கருதுவோம். அதிலும் ஹோட்டலில் காசு கொடுத்து சாப்பிட்டாலும் பசி என்ற நேரத்திற்கு உணவு கொடுக்கிறார்களே, காசு வாங்கி உணவு கொடுப்பது அவர்களது தொழில்.
அந்த உன்னதமான தொழிலில் இன்று போட்டி, பொறாமை, ஒரே நாளில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசை இவையெல்லாம் நேர்மை, நீதி நியாயம் என்பதை கண்ணை மறைத்து விடுகிறது.

உணவு கெட்டு போதல்
எந்த உணவு கெட்டு போனாலும் அது விஷமாக மாறிவிடும். அதிலும் அசைவ உணவு கெட்டு போனால் மிகப் பெரிய பாதிப்பை தரும். இதை அறிந்தும் சில ஹோட்டல்களில் முதல் நாள் மீந்து போன பிரியாணியை பிரிட்ஜில் வைத்து சூடு செய்வது கொடுப்பது, விலை குறைந்து கிடைக்கும் இறைச்சிகளை பல்க்காக வாங்கி நாள்கணக்கில் பிரிட்ஜில் வைத்து சமைப்பது போன்றவற்றை செய்கிறார்கள்.

ஆரணியில் பலி
இப்படி செய்துதான் ஆரணியில் பிரியாணி சாப்பிட்டு 10 வயசு சிறுமியும் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு 17 வயசு பையனும் இறந்து போனார்கள். அது போல் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட ஒரு 17 வயசு சிறுமி பலியானார். இது போல் உணவு பொருட்கள் நஞ்சாகி பின்னர் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

அண்ணாநகரில் ரோஸ்வாட்டர்
இந்த நிலையில் சென்னை அண்ணாநகரில் ரோஸ்வாட்டர் எனும் ஹோட்டலில் ஒரு வாடிக்கையாளர் ஆர்டர் செய்த இறால் அழுகிய நாற்றம் அடித்தது. இதையடுத்து அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் வந்து ஆய்வு செய்து 45 கிலோ கெட்டு போன இறைச்சி, மீன், சிக்கன் ஆகியவற்றையும் 10 கிலோ இறாலையும் பறிமுதல் செய்து அவற்றில் சிறு பிரிவை ஆய்வுக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ளதை அழித்தனர்.

வாடிக்கையாளர்
அந்த உணவை அந்த வாடிக்கையாளர் கண்டுபிடித்துவிட்டதால் அவரது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதே தெரியாமல் சாப்பிட்டிருந்தால் என்ன ஆவது? இவர் புகார் கொடுக்காமல் இருந்திருந்தால் அந்த 45 கிலோ அழுகிய கறியும் சமைக்கப்பட்டிருக்கும். இதனால் பலருக்கு உடல்நல பாதிப்பும் உயிரிழப்பும் கூட ஏற்பட்டிருக்கும். இது போல் ஹோட்டல்காரர்கள் காசுக்காக இப்படி கெட்டு போன உணவை ஏமாற்றி அப்பாவி மக்கள் தலையில் கட்டுவது ஒரு புறம் இருக்கட்டும்.

யூடியூபர்கள்
மறுபுறம் இந்த கடைகளில் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு சில யூடியூபர்கள் கடையின் உணவை புகழ்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஹோட்டல் ரோஸ் வாட்டலில் இர்பான் உணவை சாப்பிட்டுவிட்டு ரிவ்யூ செய்திருந்தார். அவர் உணவின் தரமும் சுவையும் நன்றாக இருக்கிறது என சர்ட்டிபிகேட் கொடுத்ததை பார்த்த அவரது சப்ஸ்கிரைபர்கள் அந்த ஹோட்டலில் போய் சாப்பிடுகிறார்கள்.

வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்
இவர் ரிவ்யூ கொடுத்த சில ஹோட்டல்களில் உணவு சுகாதாரமாகவே இல்லை என்பது உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கை மூலமே தெரிகிறது. தனது சப்ஸ்கிரைபர்களை தவறாக வழிநடத்தி குற்றத்திற்காக இர்பான் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். அவரது சேனலையும் முடக்க வேண்டும். அப்போதுதான் பணத்திற்காக தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications