நமக்கு இதெல்லாம் தேவையா நவீனு? திமுக கொடி கட்டிய காரில் ரோட்டில் கெத்து ..கொத்தாக தூக்கிய போலீஸ்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கொடி கட்டிய காரில் சாலையில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டதோடு பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில், காரை ஓட்டிய இளைஞர்களை பிடித்துள்ளனர் போலீசார். மேலும், காரை ஆபத்தான முறையில் ஓட்டிய நவீன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து 10,000 ரூபாயை அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் TN18BK6667 என்ற பதிவெண் கொண்ட திமுககொடி பொருத்திய காரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சில இளைஞர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

DMK Police Crime

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து இந்த வீடியோவை அதிமுக வேலூர் புறநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் ஹேமந்த் குமார் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், ஹேமந்தை காவல்துறையினர் தொடர்ச்சியாக தொடர்புகொண்டு அவரது வீட்டு முகவரி போன்ற தனிநபர் விவரங்களைக் கேட்டு மிரட்டும் தொனியில் பேசி வருவதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகி ராஜ்சத்யன், ஹேமந்த் குமார் தன்னுடைய பதிவில் கார் எண்ணை தெளிவாக பதிவிட்டுள்ள நிலையில், காவல்துறை நியாயமாக செயல்பட்டிருந்தால் அந்த கார் உரிமையாளரை விசாரித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மாறாக, பதிவிட்டவரை தொடர்பு கொண்டு மிரட்டல் தொனியில் பேசுவது கண்டிக்கத்தக்கது. சமூக ஊடகங்களில் யாரும் இந்த அரசையோ, ஆளுங்கட்சியின் அராஜகங்களையோ புகார் அளிக்கவே கூடாதா?
மேலும் காவல்துறையாக செயல்படுங்கள்- விடியா திமுக அரசின் ஏவல்துறையாக அல்ல! ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்! ஹேமந்த் குமாரை தொடர்பு கொண்டு, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அச்சுறுத்தியவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது அதிமுக ஐடி விங் சார்பில் சட்ட நடவடிக்கை தொடரப்படும்." என எக்ஸில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதிமுகவினர் மட்டுமல்லாது பாஜகவினரும் இந்த வீடியோவை பகிர்ந்து காருக்குள் செல்போன் பேசிய டிடிஎஃப் வாசனை கைது செய்த காவல்துறையினர், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் இதுபோன்ற அராஜகம் செய்பவர்களை கைது செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் காரை ஆபத்தான முறையில் ஓட்டிய நவீன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவுசெய்து 10,000 ரூபாயை அபராதம் விதித்துள்ளனர்.

காரின் நம்பரை வைத்து விசாரித்த போது காரை இயக்கியது திமுக நிர்வாகியான நவீன் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து மேலும் பல கார்களில் அட்டகாசம் செய்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் தெரியவந்தது. தற்போது எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ, கடந்த சில நாட்களுக்கு முன், மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் செங்குன்றம் பகுதியில் எடுத்ததும்,
TN 18 BK 6667 என்ற எண் கொண்ட Mahindra XUV 700 காரில் சென்ற போது நவீன் ஆபத்தான முறையில் ஓட்டியது தெரிய வந்தது.

இதனையடுத்து நவீன் மற்றும் அவரது நண்பர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் போக்குவரத்தி விதிகளை மீறி மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியதற்காக நவீனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+