கே.எஸ்.அழகிரி மீது பாய்ந்த 3 வழக்குகள்! என்னென்ன பிரிவு? கூட்டணிக் கட்சி ஆட்சியில் அதிரடி ஆக்ஷன்!
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி உட்பட 238 காங்கிரஸார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றார் கே.எஸ்.அழகிரி. அவருடன் திரளான காங்கிரஸ் தொண்டர்களும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூரில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக ஒன்றுகூடல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கே.எஸ்.அழகிரி உட்பட காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் நேற்றைய தினம் போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. இதனிடையே போராட்டம் நடத்தினால் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்து தான் காங்கிரஸ் கட்சியினரும் அதில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் நீதி கிடைக்காது என்பது தங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் உச்சநீதிமன்றத்தின் மூலம் நீதியை பெற்றுக்கொள்வோம் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். இதனிடையே ராகுல்காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்த போது கும்பகோணத்தில் 4 பேருடன் கே.எஸ்.அழகிரி ரயில் மறியல் செய்த படம் வைரலானது.
அதுபோல் நடந்துவிடக் கூடாது என்பதால், நேற்றைய தினம் முன்கூட்டியே தொண்டர்களை திரட்டி வைத்திருந்தார் கே.எஸ்.அழகிரி. தமிழகத்தில் கூட்டணிக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் சூழலிலும் யாருடைய தலையீடும் இல்லாமல் காவல்துறையினர் காங்கிரஸார் மீது இந்த வழக்கைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications