சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் எஸ்கேப்! இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணை!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடியான சம்பவம் செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் மொட்டை கிருஷ்ணனுடன் தொலைபேசியில் பேசியதாக இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்திய பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அது மட்டும் அல்லாமல் சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்ட பல பயங்கர ரவுடி கும்பல்கள் ஒன்றாக சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறது. குறிப்பாக இந்த கொலை வழக்கில் சிசிங் ராஜா, சம்பா செந்தில் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர் என்கின்றனர் போலீசார். வெங்கடேஷ் பண்ணையாரின் நெருங்கிய ஆதரவாளரான சம்பவம் செந்தில் சென்னையில் வழக்கறிஞராக இருக்கிறார். பிரபல ரவுடியான கல்வெட்டு ரவிக்கு பாதுகாப்பாக அவர் ஸ்கெட்ச் போட்டதாக கூறப்படுகிறது
கல்வெட்டு ரவிக்கு ஆதரவாக கத்தி எடுத்த செந்தில் வழக்கறிஞராக இருந்து ரவுடியாக மாறியதாகவும் கூறப்படுகிறது. அவர் ஸ்கெட்ச் போட்டால் மிஸ்ஸாகாது என்பதால் தான் சம்பவம் செந்தில் என பெயர் எடுத்தார். பின் நாட்களில் அது சம்போ செந்தில் என மாறியது. இந்த நிலையில் சம்பவம் செந்தில் கூட்டாளியாக மொட்டை கிருஷ்ணன் இருக்கிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட ரவுடி தொழிலிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரௌடி மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. தற்போது இல்லை.. கடந்த சில இடங்களுக்கு முன்பு இந்த விசாரணை நடைபெற்றிருக்கிறது. ஆனால் இந்த தகவல் தற்போது தான் வெளியாகி இருக்கிறது.
மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்ந்து பலமுறை மோனிஷா தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதை அடுத்து அதனை கண்டறிந்த போலீசார் அவரை நேரில் வரவழைத்து எதற்காக பேசினீர்கள்? எத்தனை முறை பேசி இருக்கிறீர்கள்? என்ன விவகாரம் குறித்து பேசப்பட்டது? என கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பி இருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் அவர் பேசியதற்கான ஆதாரங்களை காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் என்பதால் தங்கள் வழக்குகள் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாகவும் மற்றபடி அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மோனிஷா விளக்கம் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மோனிஷா மொட்டை கிருஷ்ணன் குறித்து சொன்ன தகவல்களை வைத்து நெல்சன் இடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications