கள்ள காதலனுக்கு ரூ.20 லட்சம் வரை செலவு செய்தாள் அர்ச்சனா.. அதான் கொன்னுட்டேன்!
மனைவியை கம்பியால் அடித்து கொன்ற போலீஸ்காரர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
Recommended Video
சென்னை: "கள்ளக்காதலனுக்கு 20 லட்சம் ரூபாய் வரை யாராவது செலவு பண்ணுவாங்களா? அதுவும் கடன் வாங்கி.. அதான் இரும்பு கம்பி எடுத்து என் பொண்டாட்டியை கொலை பண்ணிட்டேன்" என்று போலீஸ்காரர் ஒருவர் வாக்குமூலம் தந்துள்ளார்.
சென்னை செம்பியம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம்நாதன். இவருக்கு வயது 37. கொத்தவால்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் டிராபிக் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது 32 வயது மனைவி அர்ச்சனா. 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
கொஞ்ச நாளாகவே இவர்கள் வீட்டுக்குள் எந்நேரமும் சண்டை போடும் சத்தம் வெளியில் கேட்டு கொண்டே இருக்குமாம். அடிக்கடி வாக்குவாதமும், தகராறும் இருந்து கொண்டே வந்துள்ளது. நேற்று முன்தினம் கூட இவர்களுக்குள் பிரச்சனை வந்துள்ளது.

இரும்புக்கம்பி
அப்போதுதான் ஆத்திரப்பட்ட பிரேம்நாதன், இரும்பு கம்பியால் அர்ச்சனாவை சரமாரியாக தாக்கினார். அர்ச்சனாவின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த அர்ச்சனாவை ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே அர்ச்சனா உயிர் பிரிந்தது.

வாக்குமூலம்
உடனடியாக செம்பியம் போலீசார் இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தனர். முதல் வேலையாக பிரேம்நாதனை கைது செய்தனர். அப்போது பிரேம்நாதன் போலீசில் சொன்னதாவது:

உறவு நீடித்தது
அர்ச்சனாவுக்கும், ஒரு இளைஞருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இது எனக்கு தெரியவந்தது. அதனால அவளை கூப்பிட்டு கண்டித்தேன். என் பேச்சை கேட்கவே இல்லை. அந்த பையனுடன் தொடர்ந்து உறவு வெச்சிக்கிட்டே இருந்தாள்.

அதான் கொன்னேன்
சொந்தக்காரங்க கிட்ட 20 லட்சம் ரூபாய் வரைக்கும் கடன் வாங்கி கள்ளக்காதலனுக்கு செலவு பண்ணி இருக்கிறாள். இதையும் கண்டித்தேன். இதனால்தான் எங்களுக்குள் சண்டையே அதிகமானது. ஆத்திரப்பட்டு வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அர்ச்சனாவை அடித்து கொன்றுவிட்டேன்" என்றார். இதையடுத்து போலீசார், அர்ச்சனாவின் கள்ளக்காதலன் யார் என்று விசாரித்து வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications