அதிமுக நிர்வாகி மூலம்.. நூல் பிடித்து போன போலீஸ்.. ஸ்ரீகாந்த் மட்டுமல்ல.. "அவங்களும்" மாட்ட போறாங்க!
சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாந்த் மூலம் இவர் சிக்கி உள்ளார். இவர் சிக்கியது எப்படி.. கோலிவுட்டில் இந்த வழக்கு எப்படி அதிர்வலைகளை ஏற்படுத்த போகிறது என்று இங்கே பார்க்கலாம்.
1.கடந்த மாதம், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். இதுதான் வழக்கின் தொடக்கம். இவருடன் அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

2. தற்போது இந்த வழக்கில் கைதான அவரிடம் இருந்த போன் ஆதாரங்களின்படி அவர் போதை பொருள் விற்றதாக கூறப்படுகிறது. இவரின் போன் விவரங்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளன. முக்கியமாக பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்தன. அதாவது அவர் சென்னையில் போதை பொருள் டீலர் போல செயல்பட்டு வந்துள்ளனர்.
3. அவர் யாரிடம் போதைப்பொருளை வாங்கினார், யாருக்கு விநியோகம் செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரையும் விசாரித்தனர்.
4. அதாவது போலீசார் கிட்டத்தட்ட நூல் பிடித்து சென்றுள்ளனர். அப்போது, பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதை பிரசாத் ஒப்புக்கொண்டார். கிட்டத்தட்ட இவர்கள் கொக்கைன் டீலர்களாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களின் போனில் இதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளன.
5. ஸ்ரீகாந்த் இவரிடம் தான் கொக்கைன் வாங்கி உள்ளார். கொரோனா காலகட்டத்தில் இருந்து 40 முறை போதைப்பொருளை பயன்படுத்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் ஸ்ரீகாந்த் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பிரசாத், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்
6. இவரிடம் பல நடிகர்கள், நடிகைகள் போதைப்பொருள் வழங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த், கிளப் மற்றும் பார்களில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் அதிமுக நிர்வாகி இவரிடம் போதை பொருட்களை விற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு இவர் விற்றதாக கூறப்படுகிறது.
7. இந்த நிலையில் கைதான ஸ்ரீகாந்தை வரும் ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
8. போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், 8 முறை போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கம் பப்-ல் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் உள்ளார் பிரசாத்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து ஸ்ரீகாந்த்திடம் நேற்று சோதனை செய்யப்பட்டது. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் மூலமாக இன்னும் சில நடிகர்கள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது ஸ்ரீகாந்த் மூலம் இன்னும் பலர் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications