பாஜக நடிகை குஷ்பு கைது? வீடு முன்பு 100க்கும் மேற்பட்ட போலீஸ் திடீரென குவிப்பு- போராட்டம் காரணம்?
சென்னை: பாஜக நடிகை குஷ்பு வீடு முன்பு 100க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் நடிகை குஷ்பு கைது செய்யப்படுகிறாரா? அல்லது போராட்ட அறிவிப்புதான் காரணமா? என்கிற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்களை பலரும் தெரிவித்தனர். பாஜக நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்பதால் அங்கு புகார் செய்தார். இதனடிப்படையில் தேசிய மகளிர் ஆணையமானது மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தது. தற்போது இந்த பிரச்சனையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டார்; திரிஷாவும் மன்னித்துவிட்டார்.

ஆனால் திரிஷா விவகாரத்தில் நடிகை குஷ்பு தலையிட்டது பெரும் பிரச்சனையாகிவிட்டது. திரிஷா விவகாரத்தில் எக்ஸ் பக்கத்தில் விவாதம் நடத்திய நடிகை குஷ்பு, ஒரு பதிவில் 'சேரி மொழி' 'சேரி பாஷை' என குறிப்பிட்டிருந்தார். குஷ்புவின் இந்த பதிவுதான் இப்போது சர்ச்சையின் மையம். தலித் மக்கள் வாழும் குடியிருப்புகள் சேரி என அழைக்கப்படும்; அப்படியானால் தலித் மக்களின் மொழியான சேரி மொழி இழிவானது என்கிறார் குஷ்பு என பிரச்சனை வெடித்தது. ஆனாலும் குஷ்புவோ, சேரி என்றால் பிரெஞ்ச் மொழியில் அன்பு என பொருள் என வியாக்கியானம் செய்ய கொந்தளிப்பு அதிகமானது.
இதனால் நடிகை குஷ்பு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களும் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று மாலை 5 மணிக்குள் குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் எனவும் காங்கிரஸ் அறிவித்தது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே சென்னையில் நடிகை குஷ்பு வீடு முன்பாக திடீரென 100க்கும் மேற்பட்ட போலீசார் திமுதிமுவென வந்திறங்கினர். பெண் போலீசார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் நடிகை குஷ்பு கைது செய்யப்படப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்தது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்திருப்பதால் குஷ்புவின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கவும் போலீசார் குவிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications