திரை உலகினருக்கு போதைப்பொருள் விநியோகமா? சிம்புவின் Ex மேலாளரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
சென்னை: ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளரும் நடிகர் சிம்புவின் முன்னாள் மேனேஜருமான சர்புதினை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். யார் யாருக்கெல்லாம் போதைப்பொருள் விநியோகம் செய்தார் என்ற கோணத்தில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போதைப்பொருள் வழக்கில் கைதான திரைப்பட இணை தயாரிப்பாளரும் நடிகர் சிம்புவின் முன்னாள் மேலாளருமான சர்புதீனை போலீசார், காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள். திரை உலகில் யார் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்தார் என்பது உள்ளிட்ட கோணங்களில் சர்புதீனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

போதைப்பொருள் விற்பனை செய்ததாக சர்புதீன் மற்றும் முகப்பேரை சேர்ந்த சீனிவாசன், வளசரவாக்கத்தை சேர்ந்த சரத் ஆகியோரை கடந்த மாதம் 20 ஆம் தேதி, திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். அப்போது சிம்புவின் மேலாளராக இருந்த சர்புதீனின் காரில் இருந்து ரூ.25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, கைதான சீனிவாசன் என்பவரிடமிருந்து 10 கிலோ ஒஜி கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில், தற்போது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்புதீன் நடிகர் சிம்புவிற்கு ஏற்கனவே மேலாளராக பணியாற்றியதும் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதுமட்டும் இன்றி பல நடிகைகள், நடிகர்களுடன் பழக்கம் உடையவர் என்பதால், போதைப்பொருள் யார் யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் வைத்து பார்ட்டி நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுவதால் அதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications