உள்பாவாடையில் வைத்து பட்டு புடவைகள் அபேஸ்.. லீக் ஆன வீடியோ.. அம்மாடி மதிப்பு இவ்வளவு லட்சமா?
சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பட்டு புடவைகளை, பெண்கள் கும்பல் ஒன்று உள்ளாடைக்குள் வைத்து திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானதையடுத்து அப்பெண்கள் புடவையை கூரியர் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜவுளி கடைகள் மிகவும் பிசியாக மாறியுள்ளன. இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டு புடவைகளை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்கள் சிலர் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் கூறுகையில், "பெசன்ட் நகரில் பிரபல ஜவுளி கடையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டு புடவைகளின் கண்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்காட்சியில் பலரும் புடவைகளை வாங்கி சென்றிருக்கின்றனர். இப்படி இருக்கையில் கடந்த 28ம் தேதி 7 பெண்கள் கொண்ட கும்பல் ஒன்று கடைக்குள் நுழைந்திருக்கிறது.
இதில் 5 பெண்கள் கடையில் உள்ள ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு 2 பெண்கள் மட்டும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பட்டு புடவைகளை உள் ஆடையில் வைத்து மறைத்து திருடியுள்ளனர். அவர்கள் இருவரும் வெளியே சென்றதையடுத்து மீதமுள்ள பெண்களும் வெளியே சென்றுவிட்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் அவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்துள்ளனர்.
கும்பலாக வந்து எதையும் வாங்காமல் சென்ற சம்பவத்தை கவனித்த கடையின் உரிமையாளர் சந்தேகத்தின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை செக் செய்திருக்கிறார். அதில் இரண்டு பெண்கள் புடவையை உள் பாவாடைக்குள் வைத்து திருடி சென்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய எங்களால் உடனடியாக அப்பெண்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் தொடர் முயற்சியில் அப்பெண்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், புடவை திருடுவதை வழக்கமாக கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தோம். இதனையடுத்து ஆந்திர போலீசாரை தொடர்பு கொண்டு அப்பெண்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து புடவையை மீட்டிருக்கிறோம். தற்போது புடவை கூரியர் மூலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்திலும் இதேபோன்று ஜவுளி கடையில் ஆந்திராவை சேர்ந்த கும்பல் ஒன்று பட்டு புடவை திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை கைது செய்த காவல்துறையினர் புடவைகளையும் மீட்டனர். இந்த சம்பவத்தின் சலசலப்பு ஓய்வதற்குள் தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பண்டிகை காலத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். ஆனால் தற்போது சிசிடிவி கேமராக்கள் அதிகம் இருப்பதால் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எனவே அனைத்து கடைகளும் சிசிடிவி கேமிராக்களை பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications