ரூ.1 கோடி இழப்பீடு கேட்ட கிருஷ்ணசாமி.. சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை பதில் மனு.. தீர்ப்பு ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேரணிக்கு அனுமதி மறுத்ததால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவிற்கு காவல் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2024 நவம்பர் 7ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணியாகச் சென்று தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது, முந்தைய நாளான 2024 நவம்பர் 6 ஆம் தேதி அனுமதி மறுத்து காவல்துறை உத்தரவு பிறப்பித்ததால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

krishnaswamy high court police

இந்த மனுவுக்கு திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், போராட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்த போது, அது தொடர்பாக பல்வேறு விவரங்களை அளிக்குமாறு கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு எந்த பதிலும் அளிக்காததால் தான், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான சாலையில் அனுமதியின்றி, பேரணி நடத்த அனுமதி அளித்தால் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அனைவரும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. பேரணி நடைபெறாததால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்பது பொருத்தமற்றது எனவும், இதற்கு காவல்துறை எந்த விதத்திலும் பொறுப்பல்ல எனவும், பொதுமக்களின் நலன் கருதியே பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பதில் மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+