"ஆதிபராசக்தி அம்மா" அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை.. அன்னபூரணியை தேடும் போலீஸ்
சென்னை: தான் ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அன்னபூரணி செங்கல்பட்டில் ஒரு திருமண மண்டபத்தில் அருள்வாக்கு கூற ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர்.
Recommended Video
உலக மக்களை காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக கூறி செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டர் சமூகவலைதளங்களிலும் வைரலானது.
ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா என்ற பேஸ்புக் பக்கத்தில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என கூறிக் கொள்ளும் அவருக்கு பக்தி பரவசத்தில் பொதுமக்கள் பூஜை செய்யும் வீடியோக்கள் வைரலாகின.

பாடல்கள் எடிட்டிங்
இவரது பேஸ்புக் வீடியோக்களில் இவருக்காக பாடல்கள் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. தாயி மகமாயி வேதபுர காளி என ஒலிக்கிறது. ஏற்கெனவே விசேஷ காலங்களில் வரும் அம்மன் பாடல்களின் மெட்டை வைத்துக் கொண்டு அதன் வரிகளை அன்னபூரணிக்கேற்ப மாற்றி அமைத்துள்ளார்கள்.

யார் இந்த அன்னபூரணி
இந்த நிகழ்வு வைரலானவுடன் இன்னொரு வீடியோவும் வைரலானது. அதாவது அன்னபூரணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்தவர். மற்றொரு பெண்ணின் கணவருடன் சட்டவிரோதமாக அன்னபூரணி வாழ்ந்து வந்ததாக அவரது மனைவி புகாரின் பேரில் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

திருப்போரூர்
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் ஜனவரி 1ஆம் தேதி அருள்வாக்கு சொல்லவிருப்பதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

எச்சரிக்கை
இதையடுத்து அந்த மாவட்ட போலீஸார் திருமண மண்டப உரிமையாளரை எச்சரித்து அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர். அதையும் மீறி அனுமதித்தால் உரிமையாளர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்படுவார் என எச்சரித்துள்ளனர். அருள்வாக்கு அன்னபூரணி அம்மா என்பவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications